Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்ற விமலதாஸ் மயங்கி வீழ்ந்து பலி!!

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்ற விமலதாஸ் மயங்கி வீழ்ந்து பலி!!

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் நேற்றைய தினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் இன்று காலை (20) முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.