கிசு கிசு

அவன் கற்பழிக்கும் போது நீ ஏன் காலை விரித்தாய்?? யுவதியிடம் கேட்ட நீதிபதி!!

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணிடம், காலை நன்றாக இறுக்கி மூட வேண்டியதுதானே, என, நீதிபதி ஒருவர் பேசியுள்ளார்.

நியூஜெர்ஸியில் உள்ள ஓசன் கவுன்ட்டியின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜான் ரூசோ என்பவர்தான் இப்படி சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். அவர், கடந்த 2017ம் ஆண்டில் இருந்து, விடுமுறையில் இருக்கும் இந்த நபர், கடந்த 2016ம் ஆண்டில் ஒரு வழக்கை விசாரித்துள்ளார்.

அது ஒரு பாலியல் பலாத்கார வழக்காகும். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ‘பலாத்காரம் நடந்தபோது, உன் கால்களை இறுக்கி மூடுனியா, அப்படிச் செய்திருந்தால், உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க முடியாது, நீ காலை விரித்துக் காட்டியதுதான் பலாத்காரம் நடக்க காரணம்,’ என்று ஏடாகூடமாகப் பேசியுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண், அந்த நீதிபதி மீதே புகார் செய்துள்ளார். நீதிமன்ற நடைமுறைகளை அவர் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறி, அவர் மீது விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் விசாரணையில் பங்கேற்ற ஜான் ரூசோ, வழக்கு பற்றி கூடுதல் தகவல் பெறும் நோக்கில்தான், இவ்வாறு பேசினேன், மற்றபடி அந்த பெண்ணை புண்படுத்த வேண்டும் என நான் நினைக்கவே இல்லை, எனக் கூறியுள்ளார்.

ஆனால், தெரிந்தே இத்தகைய தவறை ரூசோ செய்துள்ளார், இது தவிர, குற்றவாளி ஒருவருக்கு, வேறு நீதிபதி விதித்த பிணைத்தொகையின் அளவையும் குறைத்து, உத்தரவிட்டுள்ளார்.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிய அந்த விசாரணைக்குழு, ரூசோவை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதுதவிர, நீதிமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி, ரூசோவுக்கு பயிற்சி அளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.