பிரித்தானியா பிணவறையில் பெண் சடலங்களுடன் உறவு கொண்ட சைகோ!

வெளி உலகுக்கு பிரித்தானிய அரசு மருத்துவமனையில் ஊழியராக வலம் வந்த ஒருவர், இரட்டைக் வதைகளுடன் தொடர்புடையவர் என்பதும்,

அவர் பிணவறையில் குழந்தை முதல் 100 வயது பெண்மணி வரையிலான சுமார் 100 சடலங்களுடன் உறவு வைத்துக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளதையடுத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள கென்ட் ப்குதியில் அமைந்திருக்கும் டன்பிரிட்ஜ் வெல் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) என்னும் இரண்டு இளம்பெண்கள் வதை செய்யப்பட்டார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளி சிக்காமலே இருந்துவந்த நிலையில், DNA பரிசோதனையின் அடிப்படையில் அதே பகுதியில் வாழ்ந்துவரும் David Fuller (67) என்ற நபர் சிக்கினார்.

Fullerஐக் கைது செய்த பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அவரது இன்னொரு பயங்கர முகம் தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்தவர் Fuller.

வெளி உலகுக்கு நாகரீகமான, திருமணமான ஒரு நபராக, கணவராக, தந்தையாக வலம் வந்த Fullerஇன் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை மருத்துவமனையின் பிணவறைகளில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் சடலங்களின் புகைப்படங்கள்.

ஒன்பது வயது சிறுமி முதல் 100 வயது பெண்மணி வரை சுமார் 100 சடலங்களுடன் உறவுகொண்டு, அவற்றை புகைப்படம் எடுத்துவைத்துள்ளார் Fuller என்பது தெரியவந்தபோது பிரித்தானியாவே குலுங்கியது.

அத்துடன், தான் உறவு கொண்ட பெண்களின் பெயர், முகவரி உட்பட பல்வேறு விவரங்களையும் அவர் தன் டைரி ஒன்றில் விவரமாக எழுதிவைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Wendy மற்றும் Caroline இருவரையும் தான் தான் வதை செய்ததாக Fuller இப்போதுதான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் இத்தனை ஆண்டுகளாக வெளியில் சொல்லாத பயங்கரங்கள் இப்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மருத்துவமனையில் எலட்ரிசியன் என்ற முறையில் பிணவறைக்குள் நுழைய அனுமதி பெற்ற Fuller, எங்கெல்லாம் CCTV கமெரா உள்ளதோ, அந்த இடங்களுக்குச் செல்லாமல் கவனமாக மறைந்து இந்த மோசமான குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் கோபம் அடைந்துள்ள நிலையில், இப்படிப்பட்ட ஒருவர் இத்தனை ஆண்டுகளாக பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பிரம்மாண்ட பாதுகாப்பு மீளாய்வு ஒன்றிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)