புதினங்களின் சங்கமம்

றாகமையில் பாலியல்லீலைகளுக்காக பேஸ்புக் மூலம் இணைந்த ஆண், பெண்கள்!!

ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (facebook) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின் போது பாலியல் செயற்பாடுகளுக்காக கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இந்தக் கைது இடம்பெற்றுள்ளதோடு,ஐந்து பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடவத்தை, தங்காலை, ஹிங்குராங்கொட, றாகம மற்றும் பரகடுவ,ஹித்தெட்டிய, கடுவலை, மாத்தறை, கிரிவடுல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.