கிசு கிசு

கணவனுக்கு துாக்க மாத்திரை தினமும் கொடுத்து மனைவி அயல்வீட்டு இளைஞனுடன் சல்லாபம்!!

தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த 14ஆம் திகதி பொலிசார் மீட்ட நிலையில் விசாரணையில் அவர் பெயர் கோவிந்தராஜ் என கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மனைவி செல்வியிடம் பொலிசார் விசாரித்ததில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அதாவது, செல்விக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு தங்கதுரையும், செல்வியும் தனிமையில் இருந்து வந்தனர்.

இதை கோவிந்தராஜ் கண்டுபிடித்த நிலையில் மனைவி செல்வியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து கணவரை கொல்ல முடிவெடுத்த செல்வி வழக்கம் போல உணவில் அவருக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுக்க அவர் தூங்கியுள்ளார்.

பின்னர் தங்கதுரை உதவியுடன் கோவிந்தராஜை இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தலையை நசுக்கியும் செல்வி கொன்றது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.