புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு அவதூறு பரப்பல்; சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பு

கிளிநொச்சி நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கு அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு மாறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து அந்த நீதிமன்றின் சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டமைக்கு சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியே கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதிக்கு அறிவித்துவிட்டு இந்த சேவைப் புறக்கப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

“கிளிநொச்சி நீதிமன்ற சான்றுபொருளான மணல் பதிவாளரினால் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அடிப்படை நடைமுறைக்கு புறம்பாகவும் அவருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.