புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி இருவர் படுகாயம் (Photos)

வவுனியா, செட்டிக்குளத்திலுள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சின்னசிப்பிக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ச் சென்றுகொண்டிருந்த ஹன்ரர் வாகனத்தின் பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தைச் சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இதனிடையே, நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.