ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு கும்பாபிசேகம் செய்த மணல் கொள்ளையர்களுக்கு நடந்த கதி!!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அ.செவியர் (சயந்தன்) மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், மூவர் இன்று (18) காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அ.செவியர் (சயந்தன்) கடந்த (14) உப்புமாவெளி பகுதியில் மணல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
உப்புமாவெளி பகுதியில் உள்ள உறுப்பினரின் காணியில் மணல் அகழப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற உறுப்பினர் மணல் கொள்ளையர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இந்தத் தர்க்கம் முற்றி, உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாக்குதல் மேற்கொண்டவர்களில் மூவர் இன்று பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

