”கடத்தப்பட்டவர்களை முதலைக்கு இரையாக்கினார் கோத்தபாய‘ என கூறியவர்களுக்கு நடந்த கதி!!

வௌ்ளை வான்’ சம்பவம் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டமை குறித்து கைது செய்யப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த இருவரும் வௌ்ளை வான்களில், நபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தது.

அன்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அத்துல சஞ்சீவ மதநாயக்க என்ற சந்தேகநபர்கள் இருவரும் அந்த ஊடக சந்திப்பில் கொலை, காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் இன்று நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)