Home புதினங்களின் சங்கமம் யாழ் வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி?!

யாழ் வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி?!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் சில காணப்பட்டமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றுவருகின்ற குறித்த பெண் அண்மையிலேயே அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பியிருந்தார்.

அவர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியிருந்தமையால் அவரை தனிமையில் வைக்க முடிவெடுக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்திருந்தார்.

இந்நிலையில் இன்று கடும் காய்ச்சல் ஏற்பட்டமையை அடுத்து குடும்பத்தார் மருதங்கேணி வைத்தியசாலைக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரிடம் நோய் அறிகுறிகள் குறித்து விசாரித்த வைத்தியாலை மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் சில காணப்படுவதாகத் தெரிவித்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரேயே குறித்த தொற்று தொடர்பில் உறுதியான முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.