கடத்தப்பட்டதாக பொய் சொன்னாராம்!! சுவிஸ் துாதரக பெண் அதிகாரி சற்று முன் கைதானார்!!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த பெண் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் விதமாக தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தி குறித்த பெண்ணை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சுவிஸ் தூதரக பெண் ஊழியர் சற்றுமுன் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

error

Enjoy this blog? Please spread the word :)