யாழில் 18 வயது மாணவனுடன் 32 வயது பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவு!!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரதேச அலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண், அயல் வீட்டில் வசிக்கும் யாழ் நகர்ப் பகுதி பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதான மாணவனுடன் தலைமறைவாகியுள்ளார். உரும்பிராய்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் ஓ.எல் பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்றவர் என்பதுடன் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையிலும் சிறப்பு சித்தி பெறுவார் என பாடசாலையால் எதிர்பார்க்கப்பட்டு கல்வி கற்று வந்தவர் என பாடசாலை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. மாணவனுடன் தலைமறைவான குறித்த பெண் உத்தியோகத்தர் பெற்றோருக்கு ஒரே ஒரு மகள் எனவும் செவ்வாய் குற்றம் மற்றும் நல்ல மாப்பிளையைத் தேடித் திரிந்த காரணத்தால் குறித்த பெண்ணுக்கு திருமணம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் தலைச் சுற்று மற்றும் வாந்தி காரணமாக அலுவலகத்திற்கு செல்லாது வீட்டில் நின்ற குறித்த பெண் உத்தியோகத்தர் மாணவனுடன் தலைமறைவாகியுள்ளதால் அவர் கர்ப்பமடைந்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகிக்கின்றார்கள். குறித்த மாணவன் சிறுவயது முதலே அரச அலுவலரான பெண்ணின் வீட்டாருடன் நெருங்கிப் பழகி வந்தவர் என்பதுடன் குறித்த பெண் உத்தியோகத்தர் சிறுவயதில் அம் மாணவனை பாடசாலை மற்றும் ரியூசனுகளுக்கு ஏற்றி இறக்கித் திரிந்தவர் எனவும் தெரியவருகின்றது. மாணவனின் தாயாரும் அரச உத்தியோத்தர் ஆவார். மாணவனின் தந்தை மின்சாரசபையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் எனவும் தெரியவருகின்றது. இவர்கள் இருவரையும் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.