பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் அவல நிலை இது!!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை (மந்திகை) யில் பல அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்று விரைவில் பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் இந்நிலையில் வெளிநோயளர் பிரிவு (OPD) வில் ஒரே நேரத்தில் மூன்று வைத்தியர்கள் கடமையாற்றக்கூடிய தளபாட வசதிகள் உள்ள போதிலும் பெரும்பாலான நேரங்களில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுகிறார். இதனால் நோயாளர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதனை தவிர்க்குமுகமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்களா?
நன்றி
பேஸ்புக்

