புதினங்களின் சங்கமம்

வீட்டுப் பணிப்பெண்கள் என்று கூறி வெளிநாட்டுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்கள்!

வீட்டுப் பணிப்பெண்கள்  என்று கூறி விபச்சாரிகளாக்கும் இலங்கை முஸ்லிம் வேலைவாய்ப்பு முகவர்கள்,வெளிநாட்டுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்கள்!

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாவிப் பெண்கள் விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாட்டு பணிப் பெண் வேலை வழங்குகின்றார்கள் என்று பெண்களை குறிப்பாக யுவதிகளை நம்ப வைத்து விபாச்சாரிகளாக விநியோகிக்கின்றனர் என்று வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. முஸ்லிம்களின் மத சட்டப்படி ஒருவர் ஏழு பெண்களைத் திருமணம் செய்யலாம்.

சில இடங்களில் உள்ள வீடுகளில் தகப்பன் மகன் என்று எல்லோரும் ஒன்றுசேர்ந்து பணிப்பெண்களை காமப் பசிக்கு இலக்காக்குவதும் அவர்கள் இணங்க மறுத்தால் சித்திரவதை செய்வது என பலசெய்திகள் ஏற்கனவே இலங்கைப் பத்திரிகைகளில் வெளியானது வெளியானது நினைவிருக்கும்

இவ்வாறான செயற்பாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம் முகவர்களே ஈடுபட்டு உள்ளனர் என்று சிங்கள இணையங்கள் செய்திகள் பிரசுரித்து உள்ளன.

இவ்விதம் ஏமாற்றப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் திரும்பி வந்த பிற்பாடு இப்பயங்கரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
காணொளியினைப் பார்க்க:

அரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்

முதலில் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து விடுங்கள்..

செய்தி ஒன்று: 13 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை அடைத்து வைத்து வேலை வாங்கியும், சம்பளமும் இந்த 13 ஆண்டுகளாக தராமல் கொடுமை செய்திருக்கிறார் ஒரு சவுதியைச் சேர்ந்த ஒரு அரபி. இந்த முறையும் ஒரு இலங்கைப் பெண்தான் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்.

செய்தி இரண்டு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு சவூதி குடும்பம் தன்னிடம் வேலை பார்க்கும் இலங்கை பணிப்பெண்ணை 24 ஆணிகளை உடல் முழுதும் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து. ஒரு சக மனிதனை / மனுஷியை சாதாரணமாக குடும்பம் நடத்தும் கணவனும், மனைவியும் சேர்ந்து உடலில் ஆணி அடிப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? எல். பி. ஆரியவதி என்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

Ariyawathi-nail-tortured-maid-saudi-arabia

செய்தி மூன்று: ஒரு இந்தோனேஷியப் பெண்ணை முகம் எல்லாம் கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி எடுத்திருக்கின்றனர் இன்னொரு சவூதி தம்பதியினர். உடலெங்கும் ஆங்காங்கே சூடு போட்டிருக்கின்றனர். தலை முதல் கால் வரை அந்தப் பெண்ணை கொடுமை செய்திருக்கின்றனர்.

செய்தி நான்கு: இன்னொரு அன்பு மிக்க சவூதி தன்னிடம் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை ரோட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தோனேசிய அரசு இதை மனிதத் தன்மையற்ற செயலுக்கும் அப்பாற்பட்டது இவர்கள் இழைத்திருக்கும் கொடுமைகள் என்கிறது. மனிதத் தன்மையற்ற செயலை விட மோசம் எனில் எவ்வளவு கொடூரர்களாய் இருக்க வேண்டும்?

செய்தி ஐந்து: முகத்தில் குத்தியே வீட்டு வேலைக்கு வந்தப் பெண்ணை கொலை செய்த அரபி.

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுதல் தொடரும் சம்பவம். அரபிகளின் உடல் ரீதியான கொடுமையையும், வெறியையும் தாங்க முடியாமல்.

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். சவூதி, குவைத், கத்தார், எமன், போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவித பெண்களின் வேலை அவர்களுக்குச் சொன்னது போல இருக்காது. குறைந்தது தினமும் 18 மணி நேர வேலை, அதுவும் சகிக்க முடியாத அளவு உடல்வேலை. மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். வாய்ப்புக் கிடைத்தால் கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள் மற்றும் கற்பழிப்புகள். இவ்வளவு கொடுமையையும் தாண்டித்தான் அவர்கள் அங்கு வேலை பார்க்கின்றனர், தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு.

வீட்டில் வேலைசெய்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசினால் மறுநாளே நடுத்தெருவில். வேலை பார்க்கும் பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை எல்லாம் அரபிகளின் கைகளில் இருக்கும். வெளியே துரத்திய மறு நிமிடமே போலிசுக்கு இவர்களே தகவல் சொல்லி பிடித்துப் போக வைத்து அடையாள அட்டை இல்லாமலிருந்த குற்றத்திற்காகவும், வேலை செய்யும் வீட்டில் இருந்து ஓடி வந்ததற்காகவும் தண்டனை உண்டு.

maid_in_arab_countriesஇன்னும் சில கேவலமான மிருகங்கள் இருக்கின்றன. சம்பளம் பாக்கி இருந்து அதைத் தர விரும்பாமல் வீட்டில் வேலை செய்யும் பெண் திருடி விட்டதாக ஒரு குற்றச் சாட்டை போலிசில் வைப்பார்கள். அதிலிருந்து மீள வேண்டுமெனில் அரபி மன்னிக்க வேண்டும். அல்லது தொலைந்த பொருள் கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். சம்பளம் போனாலும் பரவாயில்லை, உயிரோடும், கைகால்கள் ஒச்சமின்றியும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பயத்தில் சம்பளத்தைக் கூட முழுதும் பெற்றுக் கொண்டதாய் கையொப்பம் இட்டு விடுவார்கள்.

கொஞ்சம் தைரியமாய் ஒரு பெண் போலிசுக்கு சென்று வேலைக்கு வைத்திருப்பவர் கற்பழித்து விட்டார் என செல்லப் போகிறார் எனத் தெரிந்துவிட்டால், இவர்களே காவல் நிலையம் சென்று சென்று அந்தப் பெண்ணை ஒரு விபச்சாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள். அதன் பின்னர் அவள் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை. பிற நாடு மற்றும் நமது இந்தியத் தூதரகங்களும் அதிக பட்சமாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவதையே மிக முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவதில்லை. அந்த அரபிக்கு இந்தப் பெண் போனால் வேறு ஒரு பெண் கிடைப்பாள்.

உலக மனித உரிமைகள் கழகம் 2004 ல் செய்த ஆய்வின்படி சவுதியில் பணிப்பெண்களை திட்டமிட்டு , மாட்டிக் கொள்ளாத வகையில், வஞ்சிக்கின்றனர், சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்று சொல்கிறது. முறையற்ற கர்ப்பம் ஏற்பட்டு அதற்கும் பெண்களே பலிகடாவாக்கப் படுகிறார்கள். (குற்றம் நடந்ததைப் பார்த்த சாட்சிகள் வேண்டும்) பல நேரங்களில் மிக கேவலமாக நடத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மிக மோசமாக தண்டிக்கப்பட்டு கொலைக் களத்திற்கு அனுப்பப் படுகின்றனர் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.

இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு நினைப்பது, பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது. பாதிக்கப்பட்ட நாடுகள் செய்யமுடிந்ததெல்லாம் நமது முன்னாள் முதல்வர் செய்ததுபோல கடிதம் எழுதுவதும், வன்மையாக கண்டிப்பதும்தான். மனசாட்சியற்ற அந்த மிருகங்களை இந்த கண்டிப்புகளும், கடிதங்களும் ஒன்றும் செய்வதில்லை.

மேலும் பாதிக்கப் பட்டவருக்கே அபராதம் விதிப்பதையும் செய்கின்றன அரபு நாடுகளின் அரசுகள். கொடுமை செய்தோருக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதும், சிக்கலில் மாட்டி கொடுமையை அனுபவிப்போர் காவல்துறைக்குச் சென்று புகாரளித்தால் அவர்களுக்கு முறையான உதவிகள் காவல் துறையிலிருந்து கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது அவ்வறிக்கை.

இவ்வளவு கேவலமாக நமது மக்களை நடத்தும் சவூதி நாட்டின் மன்னரை குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராய் அழைக்கும் நமது ஆட்சியாளர்களை என்ன சொல்வது? இத்தனைக்கும் அப்போது ஒரு இந்தியனின் தலையை வெட்ட ஆணை பிறப்பிந்திருந்தார் சவூதி மன்னர். இன்றைக்கும் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதில் முதலில் இருப்பது சவுதி அரேபியாதான்.

இதே சவூதி மன்னர் ஒரு அமெரிக்கனையோ, அல்லது பிரிட்டிஷ்காரனையோ இப்படி கொல்ல முடியுமா? அல்லது கொடுமைப் படுத்தத்தான் முடியுமா? அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள். இவர்கள் தங்கள் நாட்டில் பிழைக்க வரும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேட்டிமைத் தனத்தை காட்டிக்கொள்ள முயன்று உலகின் முன்னர் கேவலமாகவும், கொடூரர்களாகவும் தெரிகிறார்கள்.

மதச் சார்பின்மை உள்ள நாடுகளில், 50 முஸ்லிம்கள்கூட இல்லாத ஊரில் 1000 பேர் அமர்ந்து தொழும் மசூதியைக் கட்டுவார்கள். ஆனால் அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இதர மதத்தினரின் தெய்வப் படங்களை, அவர்கள் வணக்கத்திற்குரிய தெய்வீகப் பொருட்களை குப்பையில் இடுவார்கள். கோவில் கட்ட அனுமதிக்க மாட்டார்கள். துபாயும், ஓமானும் மட்டுமே இதில் விதிவிலக்கு. இந்த நாடுகளில் மட்டுமே இதர நாட்டினரின் மத உணர்வுகளுக்கு கொஞ்சமேனும் மரியாதை இருக்கும்.

maid - abuse - saudi - arabiaபணிப்பெண்கள் வீட்டில் தனியே இருக்கும் நேரங்களில் வீட்டிலுள்ள மைனர் குஞ்சுகளையும் சமாளிக்க வேண்டும். அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே, பெரிய பெரிய வண்டிகள், மொபைல் போன் மற்றும் பெண்கள். அதுவும் இப்படி அநாதரவாய் இருக்கும் பெண்கள்தான் இவர்களின் இலக்கு. கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும். அடையாளம் தெரியாத பிணமாகவே வழக்கம்போல சொல்லப்படும்.

சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் சாலையில் செல்லும் லேண்ட்க்ரூசரோ, வேறு பெரிய வண்டிகளோ அந்தப் பெண்ணை பயமுறுத்துவதுபோல ஓட்டி பக்கத்தில் வந்து வண்டியில் ஏறு என மிரட்டுவர். கண்ணுக்குத் தெரிந்து யாருமில்லை எனில் உடனே வண்டியில் தூக்கிச் சென்றுவிடுவர். இதெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் இல்லை. மத்திய கிழக்கில் வெளிவரும் செய்தித் தாள்களை வாசித்தாலே போதும்.

ஐந்து முறை தொழுவதற்கு மட்டும் குறைவில்லை, இவ்வளவு அநியாயங்களையும் செய்து விட்டு.

இஸ்லாமிய மதத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் நாட்டிலும் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில்தான் இத்தனை அநியாயங்களும், அக்கிரமங்களும்.

மனிதாபிமானம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பவர்கள் சவுதிகளும், குவைத்திகளும். அங்கு வேலை செய்யும் நம்மஊர் முஸ்லிம்கள் கூட இதை ஒத்துக்கொள்வர்.

வன்முறை அளவு மீறும் போது, கொடுமைகள் தாங்க முடியாமல் ஆகும்போது வேலை செய்யும் பெண்ணே எஜமானரான சவுதியையும், அவர்களது மனைவியரையும் கொலை செய்வதும் இப்போது கணிசமாக நடக்கிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் எனில் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும்? அவளுக்குத் தெரியாதா கொலைக்குப் பின்னர் சிறையும், அதன் பின்னர் தலை வெட்டும்தான் என? இருப்பினும் அப்படிச் செய்கிறாள் எனில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாள்?

உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு என்று சொல்லிக்கொண்டே இதர மதத்தினரையும் பர்தா போட்டுத்தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். சாத்தான் வேதம் ஓதுவதுபோல.

இவ்வளவு தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இதுவரை இப்படிப்பட்ட கொடுமைகளை இழைத்துவிட்டு தண்டனை அடையாமல் இருக்கும் சில நூறு பேர்களைப் பார்க்கும் பலர் தண்டனை இல்லை எனும்போது, கொடுமைகளைச் செய்கின்றனர்.

இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லும் “இஸ்லாமிய மாதிரி அரசாங்கமான” சவூதி அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இல்லாமல் அநியாயம் செய்த சவுதிகளுக்கே துணை போகிறது.

தனது உழைப்பால் கிடைக்காத, அனாமத்தாய்க் கிடைத்த வளத்தையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அவர்களிடம் வேலை செய்து பிழைக்க வரும் இதர நாட்டினரை குறைந்த பட்ச அடிப்படை மனித உணர்வுடன் மனிதர்களாக நடத்துமளவுக்கு மனிதத்தன்மையை அவர்கள் வணங்கும் அல்லா அவர்களுக்கு அருளட்டும்.

இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ”கதாமா” ( Gaddama, The House Maid) என்ற மலையாளத் திரைப் படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. கதாமா என்ற சொல்லுக்கு அரபி மொழியில் “வீட்டு வேலைக்காரி” என்று பொருள்.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ஏற்பட்ட கடன்களுக்காகவும், எதிர்பாராத விதமாக கணவனைப் பறிகொடுத்து விட்டதாலும் தெரிந்தவர் மூலமாக சவுதிக்கு வீட்டு வேலைக்கு வருகிறாள் ஒரு பெண். அவளுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே கதாமா என்ற திரைப்படம்.

Gaddaama_malayalam_movieமத்திய கிழக்கில் வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் உண்மைக்கு அருகில் இதுவரை எந்தப் படமும் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை.

”கதாமா” விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு இருக்கும் இதர நாட்டிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் பெண்களுடன் நடக்கும் உரையாடல்களிலேயே அவர்களின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது. (ஸ்பான்ஸர் இரண்டு நாள் கழித்தோ அல்லது நினைக்கும்போது வந்தோ அழைத்துச் செல்வான். பாஸ்போர்ட் எல்லாம் அவனது கைக்குச் சென்றுவிடும். இனி அடுத்த இரு ஆண்டுகள் கழிந்தபின்தான் நாம் வெளியுலகையே பார்போம் – இப்படியாக)

வேலைக்குச் சென்றபின்னர் அவளுக்கு நடக்கும் கொடுமைகள் பதற வைப்பவை. துணியை சரியாக அயர்ன் செய்யவில்லை என அயன்பாக்சாலாயே உடம்பில் சூடுவைக்கிறார்கள் அரபு எஜமானர்கள். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும் ஏற்படும் கள்ளத் தொடர்பைக் குறித்து ஏன் சொல்லவில்லை என ஒரு நாள் இரவு முழுவதும் சாட்டையால் அடிக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே ஓட வைக்கிறது. கையில் பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி தன்னை வேலைக்கு அழைத்து வந்த ஆளும் நிராதரவாய் கைவிட்ட பின்னர் வேலைக்காரி என்ன ஆகிறாள் என்பதே திரைப்படம்.

நம்மூரில் கைக்காசை செலவிட்டு பிறருக்கு உதவுபவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள்”. அப்படி ஒரு பிழைக்கத் தெரியாதவராய் வருகிறாய் ஸ்ரீநிவாசன். கிட்டத்தட்ட அரபு நாடுகளில் வேலைக்கு வரும் நமது ஆட்களின் நிலையை சில சம்பவங்களில் சொல்லி விடுகின்றனர்.ஆடு மேய்ப்பவராக வருபவரும், பாலைவனத்தில் ஆடு மற்றும் ஒட்டகப் பண்ணைக்கு புல் சப்ளை செய்பவராக வருபவரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.அரபிகளின் குணம், அவர்களின் கண்ணில்லாத சட்டங்கள், புணர்வதற்காக மட்டுமே பெண்கள் என்ற அவர்களது மனநிலை, எல்லாம் மிக துல்லியமாக சொல்லப் பட்டுள்ளது. படத்தின் இசை படத்திற்கு மிக்க துணையாய் இருக்கிறது. அரபி இசையை மிகப்பொருத்தமாய் கையாண்டிருப்பது சிறப்பு.

வேலைக்காரியாக ஒரு பாவமான முகத்திற்கு காவ்யா மாதவன் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார். எத்தனை விதமான மனிதர்கள்! தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிடுவதும், அதே ஊரில் தனது தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட செல்ல முடியாமல் இருப்பினும் பிறருக்கு உதவும் ஸ்ரீநிவாசனும், அரபிகள் வேலைக்காரப் பெண்ணை வன்புணர்வு செய்துவிடாமல் காப்பாற்றி அரபியின் கையில் அடிவாங்கி இறந்துபோகும் ஆடுமேய்ப்பவரும் எல்லோரும் அவரவர் பகுதியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலைக்கு, அதுவும் இப்படியான வேலைகளுக்குச் சென்று நினைத்தே பார்க்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பணிப்பெண்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்குமுன் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிந்தித்துச் செல்லுங்கள்

 

அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா ஏன் இப்படி ஒரு கோர வெறி?

சில ஆண்ட்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரத்தை நிங்கள் அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன்

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 16 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.
August 28, 2010
அவரது உடலுக்குள் அவர் வேலை செய்த எஜமானர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டிருக்கின்றன.
சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டு எடுக்கப்பட்டவை இததனை.
இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்.

பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..

அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?
ஏன் இப்படி ஒரு கோர வெறி?

சக மனிதர்களைத் துன்புறுத்துவதில் குடும்பமாக ஏன் இப்படி ஒரு இன்ப வெறி அவர்களுக்கு?
பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?

அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.

அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?

வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறது

இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?
இலங்கை அரசு இப்படியான சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க தனது நட்பு நாடுகளுள் ஒன்றான சவூதி அரேபியாவை நேருக்க வேண்டும். அல்லது பணிப்பெண்களை ஜோர்டானுக்கு அனுப்பாமல் நிறுத்தியது போல சவூதிக்கும் அனுப்புவதை தடுக்க வேண்டும்.

இதனால் அரேபியர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் இந்தியா,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தங்களுக்கான ‘வதைபடக்கூடிய அடிமைகளை’ அழைத்துக் கொள்வார்கள்.

அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான் மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும் வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள்.
ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.

சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.

இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.

அரபு வீடுகளில் வயது போன பாட்டன் முதல் பேரன் கொள்ளுப் பேரன் வரை பாலியல் பலாத்காரம் என்ற இந்தக் கலையில் படு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

சவூதியில் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்தாலும் சவூதி அரசு அதற்காக ஒருபோதும் அலட்டிக் கொள்வதில்லை.

இஸ்லாத்தின் தாயகம் என்று தன்னை மார்தட்டிக்கொள்கின்ற ஒரு நாட்டில் பணிப்பெண்களுக்கெதிராக இத்தகைய வன்முறைகள் நிகழ்வது அந்த நாட்டை மட்டுமல்ல இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சவூதி சென்ற ஒரு ஏழைப்பெண்ணுக்கு ஆணிகளை உடலில் அறைந்து கொடுமை புரிந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது சவூதி நாடு.

தன்னுள் ஜாஹிலிய்யத்தை வளர்த்துக்கொண்டு வெளி உலகிற்கு வெட்கமில்லாமல் இஸ்லாத்தைப் போதிக்கும் சவூதி அரசு தனது வஹ்ஹாபிய சிந்தனையூடாக உலகையே இன்று சர்ச்சைக்களமாகவும்,

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இவர்களின் இந்த அயோக்கியத் தனம் தொடரும்,

சவூதியில் எஜமானின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் வீசப்பட்ட இலங்கைப் பணிப்பெண்!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர், வீட்டு எஜமானின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவராவார்.

தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஒரு வருடத்திற்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இந்நிலையில், அப்பெண் பணிப்பெண்ணாக சேர்ந்த வீட்டு எஜமானால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுகின்றன. அத்துடன், தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் தமது சொந்த தேவைகளுக்காக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் எறிந்து கொலை செய்வது கைய் கால் தலையை வெட்டுவது கண்ணை தோண்டுவது , சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள்.

இந்த சிங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமைக்காக அந்த வெறிபிடித்த வீட்டு எஜமானுக்கு கையை வெட்டி கையில் சூடுபோட்டு அடிகொடுத்து சித்திரவதை செய்து தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் உத்துவார்களா ?

சவூதியில் ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணம்படைத்தவர்களுக்கு ஒரு சட்டம்

இசுலாமிய மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை செய்கின்ற
இவர்கள் மனிதர்களா ஏன் இப்படி ஒரு கோர வெறி?

 

இலங்கை பெண்ணின் உடலில், 24 ஆணிகள் அடித்து எஜமானர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 20 லட்சம் பேர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில், 14 லட்சம் பேர், வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு, எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து மாதங்களாக அரியாவதி(49) என்ற பெண், நிலசுவான்தார் வீட்டில் வேலை செய்து வந்தார். “அதிக வேலை தருகிறீர்களே’ என, இந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த நிலசுவான்தாரும், அவரது மனைவியும், அரியாவதியின் நெற்றி, கை, கால்களில் இரண்டு அங்குல நீளமுள்ள 24 ஆணிகளை சூடாக நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல், கடந்த வாரம் அரியாவதி கொழும்பு திரும்பினார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அரியாவதி, நடந்த சம்பவங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து இவரது உடலில் நுழைக்கப்பட்டுள்ள ஆணிகளை எடுப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆணிகள் சூடாக்கப்பட்டு பாதம், கால்களில் நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் ஊசி வைத்தும் குத்தியிருக்கின்றனர். அதற்கான தழும்புகள் காணப்படுகின்றன. அதில் நெற்றிப் பகுதியில் ஒன்று இருக்கிறது. சவுதி அரேபிய நிலசுவான்தார் தம்பதியினர் செய்த இந்த கொடுமை குறித்து, அந்நாட்டு அரசிடம், இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Rate This
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா (பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்
வெறோனிக்கா – தமிழில் என்.சரவணன்.)
இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.
இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.
உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.
தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).
இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.
சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.
ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.
உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.
அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.
தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.
ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.
“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு… குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்…. “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..
அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.
இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்…” எனறார்.
இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “…எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்
“..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.” என்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.
வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.
வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.
27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
நீக்கப்பட்ட ஆணிகள்
கண் இமை நெற்றிக்கருகில் – 1 கம்பி
வலது கையில் – 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் – 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் – 4 ஆணிகள்
இடது காலில் – 2 ஆணிகள்
ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.
குறிப்பு
மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.
சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.
இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்