புதினங்களின் சங்கமம்

யாழ் கஸ்துாரியார் வீதி மயூரன்ஸ் நகைக்கடையில் நகை ஓடருக்கு கொடுத்த குடும்பப் பெண்ணுக்கு நடந்த அலங்கோலம்!!

பிறந்தநாள்  ஒன்றிற்கு பரிசளிப்பதற்கா யாழ் கஸ்துாரியார் வீதியில் உள்ள மயூரன்ஸ் நகைக் கடடையில் மோதிரம் ஓடர் கொடுத்த பெண் ஒருவர் குறித்த நகைக்கடை முதலாளி உட்பட்டவர்களால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். குறித்த மோதிரத்தை ஓடர் செய்தவர் தனது நண்பிக்கு கவலையுடன் தெரிவித்த கருத்துக்களை இங்கு தந்துள்ளோம்.

பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்காக இலக்கம் 7 கஸ்துாரியார் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மயூரன்ஸ் நகைக்கடைக்கு மோதிரம் ஒன்று வாங்குவதற்காக ந்ண்பியும் கணவரும் சென்றுள்ளார்கள்.  அங்கு இருந்த மோதிரங்களின் டிசைன்கள் நண்பிக்கு பிடிக்காத காரணத்தால் மோதிரத்தை செய்வதற்கு ஓடர் கொடுத்துள்ளார்கள். அதுவும் பிறந்த நாளிற்கு  அன்பளிப்பு செய்வதற்கு என கூறி அந்த நாளுக்கு முன்னர் மோதிரத்தை தரவேண்டும் என நகைக்கடைக்காரனிடம் உத்தரவாதம் வாங்கிய பின்னர் 4 கிராம் மோதிரத்தை செய்வதற்கான மொத்தப் பணத்தையும் தருமாறும் 02.06.2026 அன்று மோதிரம் உங்களுக்கு தருவோம் என நகைக்கடைக்காரர் உறுதியாக கூறியதாலும் 2 லட்சம் ரூபா மொத்த பணத்தையும் அவர்களி்டம் நண்பி கொடுத்துள்ளாள்.

அவர்கள் சொன்ன திகதி அன்று மதியம் குறித்த கடைக்கு சென்ற போது மோதிரம் இன்னும் தயாராகவில்லை மாலை வாருங்கள் என கூறியுள்ளார்கள். மாலை சென்ற போது அடுத்த நாள் வருமாறு கூறியுள்ளார்கள். மறு நாள் சென்ற போது இன்னொரு நாள் வருமாறு கூறவே பிறந்த நாள் நாளை வரப்போகின்றது. உடனடியாக மோதிரத்தை தாருங்கள் அல்லது பணத்தை தாருங்கள் என நண்பி  கேட்டுள்ளாள். அதற்கு மயூரன்ஸ் நகைக்கடை முதலாளி உட்பட்டவர்கள் ”பணம் தர முடியாது ஓடர் கொடுத்த நகையைத் தான் தருவோம். அதுவும் இப்போது அல்ல. ஓரிரு நாட்களின் பின்னர்தான் தர முடியும் என கூறிய போது நண்பி மீளவும் பணத்தை கேட்ட போது மிகவும் தரக் குறைவான ஆபாச வார்த்தைகளால் நண்பியை ஏசியுள்ளதுடன் அச்சுறுத்தியுமுள்ளார்கள்.

அதன் பின்னர் நண்பியின் கணவன் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து நகைக்கடையை முற்றுகையிட்ட பின்னரே நகை நண்பியின் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. அதுவும் 4 கிராம் நகைக்கு 2 மஞ்சாடி கூடவுள்ளது. அதற்கு 39 ஆயிரம் கூட தரவேண்டும் என கூறி கடும் வாக்குவாதத்தில் மயூரன்ஸ் நகைக்கடை காவாலிகள் ஈடுபட்டுள்ளார்கள். நண்பி அதற்கான பணத்தையும் கொடுத்து நகையை வாங்கிக் கொண்டு இன்னொரு நகைக்கடையில் நிறுத்து பார்த்த போது அரை மஞ்சாடி நகை குறைவாக காணப்பட்டுள்ளது என நண்பி கூறினாராம்.

இது தொடர்பாக நாம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த மயூரன்ஸ் நகை மாளிகை டுபாக்கூர் என்றும் இங்கு சென்ற பலர் இவ்வாறு கடுமையாக ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எனவும் ஏனைய நகைக்கடைக்காரர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆகவே இனிவரும் காலம் இந்தக் காவாலிகளிடம் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x