புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பு எரிந்து நாசம்!

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் முட்கொம்பன் காட்டில் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்பில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் தென்னந்தோப்பு பராமரிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று எரிந்து நாசமாகியுள்ளது.

சின்னபல்வராயன் தென்னந்தோப்புக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரப்பல், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தோப்பினை அழித்துள்ளது.

தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை மற்றும் காற்று காரணமாக தென்னந்தோப்புக்குள் தீ வேகமாக பரவியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து தீயணைப்பு பணியாளர்களும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.