இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால்
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி
வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக
பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தெலுக் பிடங் நகரத்திலிருந்து 227 கிமீ தூரத்தில் 59 கிலோ மீட்டர்
ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. முன்னதாக
2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த
நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து
220,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.





