புதினங்களின் சங்கமம்

பிரான்சிலிருந்து ஜேர்மன் சென்ற தமிழ் காவாலிகள் யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!

பிரான்ஸ் பகுதியில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் வேலை செய்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பிரான்சிலிருந்து சென்ற சில தமிழ் காவாலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வேலைத்தளத்தை விட்டு வெளியே வந்த குறித்த குடும்பஸ்தரை கார் ஒன்றில் வந்தவர்கள் மறித்து தாக்கியதாகத் தெரியவருகின்றது. பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை வைத்திருக்கும் தமிழ் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட பிணக்கே குறித்த தாக்குதலுக்கு காரணம் எனவும் தாக்கியவர்களில் இருவரை தனக்கு அடையாளம் தெரியும் எனவும் ஜேர்மன் பொலிசாரிடம் குடும்பஸ்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.