பௌத்த பிக்குமார்களை அவமானப்படுத்திய ரஞ்சன்! வீதிக்கு இறங்கிய மஹிந்த அணியினர்
பௌத்த பிக்குமார்களை அவமானப்படுத்தியதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.
அந்த வகையில் பிரதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலி மாவட்டம் அக்மீமன பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
அக்மீமன பிரதேச சபைக் கூட்டம் இன்று காலை கூடியபோது பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி சபைக் கூட்டத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சபை நடவடிக்கை சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

