Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண நபருடன் கள்ளத் தொடர்பு!! பதுளையில் கர்ப்பிணியைக் கொலை செய்த கணவன்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாண நபருடன் கள்ளத் தொடர்பு!! பதுளையில் கர்ப்பிணியைக் கொலை செய்த கணவன்!! நடந்தது என்ன?

பதுளை – ஸ்பிரிங்வேலி தோட்டத்தில் கர்ப்பிணியான தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஸ்பிரிங்வேலி தோட்டம், முதலாவது பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரான கணவர், கொழும்பில் பணிபுரிந்து வருவதோடு, அண்மையில் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல் கிடைத்துள்ளது.

அவர் யாழ்ப்பாணம் பகுதியில் நபரொருவருடன் தொடர்பை பேணி வருவதாக தகவல் கிடைத்தமையால் மனைவியை கொலை செய்ததாக கணவர், பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சம்பவம் தொடா்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.