கிளிநொச்சியில் நடைபாதை வியாபாரியான முஸ்லீ்ம் காவாலியின் லீலைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் “பாரூக் பாய்ஸ்” எனும் நபர் தமிழர்களின் காணிக்கு கள்ள உறுதி செய்து தன்னுடைய பெயரில் மாற்றி வருகிறார். இதுவரையில் 27 காணிகளை இவ்வாறு மாற்றியுள்ளார் (எமக்கு தெரிந்தவை).

நான் இராணுவ உளவுத்துறையை சேர்ந்தவன் என கூறிக்கொள்ளும் இவர் விடுதலை புலிகளுடன் நெருங்கியவர்கள் காணிகளையும், ஏழை எளியவர்களின் காணிகளையும் இவ்வாறு கள்ள உறுதி செய்து ஆக்கிரமித்து வருகிறார்.

புலனாய்வு துறை ஒருவருடன் தகராறுக்கு செல்ல வேண்டாம் என பலர் ஒதுங்கியுள்ள நிலையில் சிலர் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். ஆனால் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. றிசாத் பதியுதீன் அவர்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முறைப்பாடுகளை தவிடுபிடி ஆக்கி வந்துள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த இந்த நபர் கிளிநொச்சி சந்தையில் நடைபாதை துணிக்கடை வியாபாரியாக உள்ளார். குறித்த நபரின் செயல்பாடுகளை ஜனாதிபதியின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்றேன். நிஜ உரிமையாளர்களின் முறைப்பாட்டு கடிதங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரத்தையும் கோரியுள்ளார். தற்போது அதனை சேகரித்து வருகிறேன்.

குறித்த நபருடன் சேர்ந்து பல தமிழ் அரச ஊழியர்களும் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டு வருவது வருந்தத்தக்க விடையம். கள்ள உறுதி செய்து விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் வழக்கறிஞர் , நொத்தாரிஸ், கம சங்க உறுப்பினர்கள், தரகர்கள் என அனைவரின் தகவலும் இப்பொழுது சேகரிக்கப்பட்டு வருகிறது

இதுவரை எம்மை 7பேர் வரை தொடர்புகொண்டு முறைப்பாடுகள் செய்துள்ளனர். மற்றையவர்கள் விபரத்தை சேகரித்து வருகிறோம். இது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் உடனடியாக எம்மை தொடர்புகொள்ளவும். உங்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் பெற்றுத்தரப்படும்.

Vinoth Balachandran SLPP எனும் முகப்புத்தகத்தில் வெளிவந்த தகவலே இது!!

Image may contain: 1 person, smiling, text

error

Enjoy this blog? Please spread the word :)