நல்லுாரில் பொலிஸ் உயரதிகாரியின் தம்பி திருவிளையாடல்!! காரை கோயிலுக்கு முன் விட்டு வேடிக்கை பார்த்த முருகன்!!
நல்லூரில் வயதானவர்கள் சுடும் வெயிலில் பாதணிகளை அணிந்து வீதியில் நடமாட முடியாத நல்லூர் சட்டம் சிங்கள மாப்பிளைக்கு வளைந்து கொடுக்கும் மாநகரசபையும் நல்லூர் முதலாளியும்.
நல்லூர் ஆலய திருவிழா என்றால் பல சட்டதிட்டங்கள் இது அனைத்தும் வயதான அம்மா அப்பா மார்கள் கடைசி வரியலுக்கு அப்பால் செருப்பு போடாமல் சுடும் வெயிலில் நல்லூரானை தரிசிக்க வேண்டும்.
ஆனால் பொலிஸ் உயர் அதிகாரியின் உறவினர் காரில் சென்றது மட்டுமல்லாது நல்லூர் முன் வாசல் மரத்தடியில் கார் நிறுத்தப்பட்டது நல்லூர் சட்டம் விதிவிலக்காகியது
பொலிஸாரும் மாநகர சபையும் மற்றையது நல்லூர் எஜமானின் சிவப்பு சால்வை படையும் வேடிக்கை பார்த்தது.
சிவப்பு சால்வைப் படை என்பதை தவறாக விளங்க வேண்டாம் உண்மையில் நல்லூரானுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட சிவப்புச் சால்வை மீள அடியவர்களை குறிப்பிடவில்லை.
நல்லூர் எஜமானுக்காக பணம் வழங்கப்பட்ட சிவப்புப்பட்டி அடியவர்கள் அல்ல அடியாட்களையே கூறுகிறேன்.
இவர்களை தொண்டர் என்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என நான் நினைக்கிறேன் எனெனில் இரு வருடங்களுக்கு முன்னர் காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முருகப்பெருமானுக்கு சிதறு தேங்காய் அடிப்பதற்கு வந்தார்கள்.
ஆனால் நல்லுர் எஜமானின் சிவப்புப்பட்டிப் பிரிவு தேங்காய் உடைப்பதை தடுத்தது கம்பி வேலிக்கு அப்பால் உடையுங்கள் என்றது.
ஆகையால் இவர்களை அடியவர்கள் அல்லது தொண்டர்கள் எனக் கூறுவதைப் பார்க்கிலும் எஜமானின் அடியாட்கள் எனக் கூறுவதே பொருத்தம்.
நல்லூரானுக்கு தேங்காய் உடைப்பதை தடுக்கும் அதிகாரம் நல்லூராணுக்கு மட்டுமே உள்ளது சிவப்பு பட்டி என்ன எஜமானால் கூட தடுக்க முடியாது.
அவ்வாறு தேங்காய்களை உடைக்க வந்த உறவுகளுடன் தர்க்கம் புரிந்து கம்பி வேலிக்கு அப்பால் செல்லுங்கள் என கடந்தொனியில் சிவப்புப் பட்டி எச்சரித்தது.
அம்மார்கள் கேட்ட கேள்வியால் சிவப்பு பட்டிகள் தானாக ஒதுங்கின.
அது மட்டும் அல்லாது ஊடகவியலாளர்கள் வீடியோ ஒளிப்பதிவு கம்பி வேலிக்கு அப்பால் எடுக்க வேண்டும்.
கோவிட் 19 நோய் தாக்கத்தின் காரணமாக தூக்கு காவடிகள் ஆலயத்தின் முன்பக்க வாயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை அக்கால பகுதியில் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இம்முறையும் தூக்குக்காவடிகள் பருத்தித் துறை வீதியில் முன் பக்க வாயிலில் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேர்த்திக் கடன் எடுத்து வருபவர்களுக்கு கூட ஆலயத்தின் முன் பகுதியில் முருகனைப் பார்த்து நேர்த்தியை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதுவும் எஜ மானுக்கு முருகன் கனவில் தோன்றி கூறினாரா?
அண்மையில் பாதிரியார்கள் நல்லூர் ஆலயத்துக்குள் சென்றார்கள் இது ஒரு மத நல்லிணக்கமாக இருக்கலாம் கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஆண்கள் மேலங்கியை கழட்டுவதில்லை.
ஆனால் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் நல்லூருக்குள் வரும்போது மேலங்கியை கழட்ட வேண்டும் என்கிறார்கள் ஆனால் பௌத்த மத வழிபாட்டில் மேலங்கியை கழட்டும் வழக்கம் இல்லை.
இதை நான் முரண்பாடாக கூறவில்லை நல்லிணக்கம் என்ற போர்வையில் நடந்து கொள்ளும் மேதாவித்தனத்தை ஆலயத்துக்கு வரும் ஏழை மக்களிடமும் காட்டுங்கள்.
இன்றைய தினம் போலீஸ் உயரதிகாரியின் உறவினர் காரில் ஆலய முன்பக்க வாயிலில் வந்தது ஒரு சம்பவமாக பார்ப்போம்.
ஆனால் ஒரு நடக்க முடியாத அல்லது ஒரு மாற்றுத்திறனாளியை ஆலய முன் வாசலில் வாகனத்தில் கொண்டு வருவதற்கு போலீசாரோ மாநகர சபையோ அல்லது சிவப்புப் பட்டிக் காரர்கள் அனுமதிப்பார்களா.
சிலர் கூறலாம் போலீசார் அனுமதித்ததற்கு சிவப்பு பட்டி காரர்கள் என்ன செய்வார்கள் என.
நல்லூர் 25 நாள் திருவிழாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றார்கள் ஒரு ரூபாய் பற்றுச்சீட்டை வைத்து நல்லூரில் நடப்பது எல்லாம் சரி என கூறி விடுவது மடமைத்தனம்.
போலீசாரின் செயல்பாடு திருப்தி அளிக்காவிட்டால் போலீசாரை ஆலய சூழலில் இருந்து வெளியேற்றி வெளி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துங்கள்.
பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இருபத்தைந்து நாளுக்கும் சம்பளம் கொடுத்து சிவப்பு பட்டி காரர்களாக இணைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துங்கள் அவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைத்ததாக இருக்கும்.
நல்லூர் பின் பகுதி பருத்தித்துறை பிரதான வீதியை மறைத்து அடைத்து விட்டார்கள்.
ஏன் அடைத்தார்கள் எதற்கு அடைத்தார்கள் என்பது இதுவரை மாநகர சபை கூறவில்லை.
திருவிழாவின் போது இலட்சம் பேர் ஒன்று கூடும் நல்லூரில் குறித்த வீதியை அடைப்பதால் சன நெருக்கடி அதிகரிக்கும் இதையும் எஜமானுக்கு நல்லூர் முருகன் கனவில் சொல்லி அடைத்தாரா?
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய வளாகத்தினுள் தனது வாகனத்தை அடாத்தாக நிறுத்தியதால் ஆலயச்சூழலில் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுடைய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி உள்ள நிலையில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு சிவப்பு வெள்ளை வேலிகளுக்குள் எவ்வித வாகனங்களும் அனுமதிக்காதவாறு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று மதியம் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் சிவப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்ட தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய முன்றலில் பக்தர்கள் பிரதட்டை அடிக்கக்கும் மணல்மேல் தனது காரை நிறுத்தியுள்ளார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் சிவப்பு வெள்ளைக் கொடி கட்டப்பட்ட ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாடியதாக நேரில் கண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குறித்த வாகனத்தை ஆலய வளாகத்தில் நிறுத்த அனுமதித்த பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவ்விடத்தில் வாகனத்தைவிட்எதற்காக அனுமதித்திர்கள் என வினாவியபோது”அவர் IG இன் சகோதரர்; அவரை எப்படி நாம் மறிப்பது” என அங்கு கடமையில் நின்ற பொலிஸார் தெரிவித்தனர்.
போலீசாரின் கருத்து தொடர்பில் எஜமானோ மாநகர சபையோ என்ன கூற போகிறது.
Sornalingam Varnan





