உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் வீதியும் காப்பற்றும்!! (Photos)
உங்களுக்கு சோக்கான உண்மைக்கதை ஒன்று சொல்லுறன் கவனமாய்க் கேளுங்கோ
எங்கடை சைவத்தமிழ் பள்ளிக்கூடத்திற்கு முன்னாலை மழைகாலத்தில வெள்ளம் நிண்டு பள்ளிக்கூடபிள்ளையள் சப்பாத்து சொக்ஸும் நனைந்து ஈரத்தோடை இருந்து படிக்குதுகள் போக்குவரத்துக்கு வெள்ளம் என்டு எல்லாரும் முறைப்பாடு செய்து ஒருமாதிரி அமைச்சர் டக்ளஸ் ஐயா 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அத்திவாரம் போட்டு வேலை தொடங்கி கொஞ்ச நாள் அமர்க்களம்.பின்ன பாருங்கோ வெள்ள வாய்க்கால் பிரச்சனையை தொடங்கியது இரண்டு குடும்பம்.அவை தங்கட பகுதியை திரட்டி வடக்கு வெள்ளம் கிழக்கை வந்து தங்கடை வீடுகள் தண்ணீயில மிதக்கப்போகுது எண்டு ஊதிப்பெருப்பிச்சுப் போட்டினம்.உயர்அதிகாரிகள் வந்திச்சினம்.
கூட்டமும் தொடங்கிச்சு கூட்டத்தில பாருங்கோ எங்களைப்பற்றி சொல்லத்தேவையில்லைத்தானே ஒன்டு ரண்டுபேர் வந்த உயரதிகாரிகளை மதிக்காமல் வெளுத்து வாங்கதுணைக்கு வந்தாக்களுக்கு என்ன நடக்குதுதெண்டு தெரியாமல் முழிபிதுங்க ச்சா சொல்லத்தேவையில்லை. உ.அதிகாரிகளை பாருங்கோ கதைக்க விடேல.
இப்படியிருக்க அவிருத்தியை நிப்பாட்டோனுமெண்டு நாங்கள் சொல்லேல பள்ளிக்கூடத்தி சரி கோயில்ல சரி வெள்ளம் நின்டாலும் பறவாயில்ல எங்கடேக்கை வரக்கூடாது இது ஒருசாரார் இப்படி வேலைத்திட்டம் இழுபடேக்கை நான் இந்த T.O மாரட்ட கேட்டன் வேல நிப்பாட்டியாச்சோ எண்டு இல்லையில்லை சித்திரை வருசத்திற்கு முன் முடிப்பம் எண்டிச்சினம் இப்ப ஒருத்தரையும் காணேல்ல இப்ப காப்பற்றையும் காணே சும்மா கிடந்த றோட்டை கிண்டினது மட்டுமல்ல சனத்திற்ன்ரை காணியின் வேலியையும் புடுங்கியாச்சு. என்ன நடக்கப்போகுதோ தெரியல என்ர ஓடையம்பதியானே நல்ல தீர்ப்பைச்சொல்லி சனம் இலகுவாக போய்வரச் செய் கற்பகவிநாயகா!
நான் சும்மா சொல்லேல இஞ்சை பாருங்கோ றோட்டை.
இதுக்குள்ள நல்ல முசுப்பாத்தியள் இருக்கு நான் எல்லாத்தையும் சொல்லேல
சொன்னால் பாருங்கோ ஏற்கனவே உ.அதிகாரிகளுக்கு மரியாதை குடுத்து எங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவைக்கு.
R.D.A என்ன சொல்லப்போகுது பாப்பம்.அதுக்குப்பிறகு தான் மிச்சம்.அப்ப போட்டுவாறன். படத்தை பாருங்கோ யோசியுங்கோ.