இஸ்லாமிய சகோதரனே இப்பொழுது விளங்கிவிட்டதா நானும் நீயும் அவர்களுக்கு சிறுபாண்மை தான்!!

ஆளுனர் இராஜினாமா விடயத்தில் பெரும்பாண்மையான தமிழர்கள் தேரரின் உண்ணாவிரதம் சம்மந்தமாக எதிர்ப்பையும் பதவிவிலகியவர்களுக்கு ஆதரவான மனப்பாங்கிலும் தான் பதிவுகளை இடுகின்றனர்..காரணம் 30 வருடங்கள் நாங்கள் வாங்கிய அடி…

தேரரின் உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் என்று நாடு உள்ளது..விரும்பினால் அவர்கள் அங்கு செல்லட்டும்..இதுசிங்கள பௌத்தநாடு.இங்கு சிறுபாண்மையினர் அவர்கள் சொல்வதையே கேட்கவேண்டும் என பேசுகிறார்கள்..

இஸ்லாமிய சகோதரனே இப்பொழுது விளங்கிவிட்டதா நானும் நீயும் அவர்களுக்கு சிறுபாண்மை தான்…நாளைக்கு ஹலால் உணவுக்கு தடை கோரி இன்னொரு தேரர் உண்ணாவிரதம் இருப்பார்..உனது வயிற்றை அடிக்கும் செயற்பாட்டை செய்வார்…இந்த நேரம் தான் நானும் நீங்களும் எமது தலைமைகளும் உங்கள் தலைமைகளும் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம்…இந்த நேரத்திலும் புலிகளை கேலி செய்து அரசாங்கத்தை தான் சார்ந்திருப்போம் என எண்ணினால் எமது நிலைத்திருப்பு எதிர்காலத்தில் நிற்சயம் கேள்விக்குரியதாகி விடும்…

இன்றிலிருந்து எமது பதிவுகளில் வெறுப்பை தவிர்த்து தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தை மதங்களுக்கு அப்பால் சென்று ஸ்தாபிப்போம்..உங்கள் நண்பர்களோ அரசியல்வாதிகளோ நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுத்துவதை தடுத்து நிறுத்துங்கள்…

ஆனாலும் எனது மனம் என்ன சொல்கிரது என்றால் ஹிஸ்புல்லா.அசாத்சாலி எல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்கள்,இப்பொழுது இந்த பிரச்சனை வந்த பின்னர் முஸ்லிம் மக்களின் ஹீரோக்கள்..வரும் தேர்தல்களில் அவர்களுக்கு அமோக வெற்றி உறுதி…அதை காட்டி நிற்சயம் மஹிந்த அரசில் நல்ல அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சை பெற்று பழைய குருடி கதவை திறடி என்பதுபோல அரசாங்கத்துடன் இணைந்தே பயணிப்போம் என்று பயணிக்க தொடங்கிவிடுவார்கள்..தமது அரசியல் இருப்பிற்காக தமிழர்களையும் முஸ்லிங்களையும் பிரிக்கும் நச்சுப்பேச்சுகளை பேசி எமது அடிப்படைவாதிகளுக்கும் உங்கள் அடிப்படைவாதிகளின் வாய்களுக்கும் தீனி போடுவார்கள்…

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் சுகபோக வாழ்வு….சஹ்ரான் எனும் பெயரை கூட அறியாத விளிம்பு நிலை முஸ்லிம்களின் பொருளாதாரம் இன்னொருமுறை காடையர்களால் அழிக்கப்படும்,,,வழமைபோல உனக்கும் எனக்கும் அல்வா மட்டுமே எஞ்சும்…நாம் பிரிந்திருக்கும் வரைமட்டுமே எமது அரசியல்வாதிகளும் அவர்தம் குடும்பங்களும் வாழும்…நிதானமாக எதிர்காலத்தை மனதில் வைத்து ஒற்றுமையுடன் பயணிப்போம்

நன்றி
முகப்புத்தகப் பதிவு

error

Enjoy this blog? Please spread the word :)