புதினங்களின் சங்கமம்

முன்னாள் பெண்போராளிகள், மாவீரர் மனைவிகள் உதவி தேவை எனின் என்னுடன் படுக்க வேணும்!! வெளிநாட்டு மன்மதனின் ஓடியோ!!

வன்னியின் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் ஊனமடைந்த பெண் போராளிகள், மற்றும் இறந்த போராளிகளின் மனைவிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து மிகப் பாரிய அளவான பாலியல் வேட்டை நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பபாக உள்ளூரில் செயற்படும் காவாலிகள் மூலம் இந்தப் பாலியல் வேட்டைகளை வெளிநாட்டில் உள்ள சில தமிழ்க் காவாலிகள் மற்றும் வயோதிப மன்மதன்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த காவாலிகள் தங்களது பேஸ்புக் மூலம்  உதவி செய்வதாக கூறி வன்னியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களை அணுகி அவர்களை வைத்து விளம்பரப்படுத்தியே இந்த பாலியல் வேட்டை மிக மும்முரமாக நடந்து வருகின்றது.

வெளிநாட்டில் உள்ள கருனை உள்ளம் படைத்த பலர் இவ்வாறு வீடியோக்களை வெளியிடுபவர்களை நம்பி பெருமளவு பணத்தை குறித்த பெண்களுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த  பணத்தை அவர்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து அதில் குறிப்பிடத்தக்களவு பணத்தை தங்களது சேவைக்காக பிடுங்கிக் கொள்கின்றார்கள். இது தொடர்பாக உதவி பெற்றவர்களும் மூச்சு விடுவதில்லை. அது மட்டுமல்ல வெளிநாட்டில் இருக்கும் வயோதிபக் காமுகர்கள் இவ்வாறான உள்ளூர்க் காவாலிகளை அணுகி அவர்கள் மூலம் ஏழைப் பெண்களை பாலியல் வேட்டையாடி வரும் சம்பவங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது. இதோ இன்னொரு வெளிநாட்டுக் காமுகன் கூறும் தகவல்கள் இவை