புதினங்களின் சங்கமம்

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா தனது 69வது வயதில் காலமானார்.

மின்சார கண்ணா, தலைநகரம், நட்புக்காக, டான், நாய்சேகர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் மனோபாலா.

இவர் ஊர்க்காவலன், வெற்றி படிகள், நந்தினி, நைனா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 10 நாட்களாக மனோபாலா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

மனோபாலாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்களும், திரையுலகினரும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.