உரும்பிராய் ரகுராமை நீதிமன்றத்தில் நிறுத்திய சட்டவைத்திய அதிகாரி!! நீதிமன்றில் ரகுராமுக்கு கடும் எச்சரிக்கை!!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வந்ததாகத் தெரிவித்து
யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதையடுத்து, நேற்று (19) யாழ் பொலிஸ் நிலையத்திற்கு ரகுராம் என்ற நபர் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன்று அவர் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். ரகுராம் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகினார்.
வைத்தியர்களுக்கு எதிராக அவதறு பரப்புவதற்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
தனது வாடிக்கையாளர் இவ்வாறான பிழையான நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட மாட்டார் என சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ரகுராமை கடுமையாக எச்சரித்து, பிணையில் விடுவித்த நீதவான், வழக்கை ஒத்தி வைத்தார்.

