புதினங்களின் சங்கமம்

சிறுவனால் வவுனியா தையல் கடைக்காரருக்கு ஏற்பட்ட கதி.!

வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு வவுனியா பொலிஸார் எச்சரிக்கை கொடுத்து விடுத்துள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவன் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளான்.

இதனை அவதானித்த பொலிஸார் குறித்த சிறுவனை அழைத்து விமானப்படையினரின் சீருடை எவ்வாறு என விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது நெளுக்குளத்தில் அமைந்துள்ள தையல் நிலையத்தில் இதனை கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

குறித்த தையல் நிலையத்திற்கு நேற்று (26.03) மதியம் 3.00 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் தையல் நிலையத்திற்கு உரிமையாளரை விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அதன் பின்னர் இவ்வாறான உடைகளை விற்பனை செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுத்திருந்தனர்.