முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் மர்மமான நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் பகுதியில் வீட்டில் இருந்து நேற்று (19) பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இறந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது கொலையா அல்லது நோயினால் இறந்து இருக்கிறாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பெண்ணினுடைய சடலம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு அதன் பின்னதாக மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்தோடு தடவியல் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸாரின் சோதனைகள் இடம்பெற்றதோடு ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

