தமிழர்களின் வாக்கு தமிழனுக்கே கிடைக்க வேண்டுமாம்!! அனந்தி சொல்கின்றார்!!
ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளர் களமிறங்க வேண்டும் என்கின்ற கருத்து மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் மதகுருமார்களிடம் ஏற்பட்டதன் விளைவாகவே சிவாஜிலிங்கத்தை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு தீர்மானித்தாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழர்களாக சிந்தித்து தங்களுடைய வாக்குகளை சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
மேலும் கடந்த கிழமை பல்கலை கழக மானவர்கள் ஒன்றியத்தாலும் சிவில் அமைப்புகளாலும் ஐந்து கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஒரு தீண்டத்தகாத கோரிக்கைகளாக சிங்கள பேரினவாத கட்சிகளால் பேசப்பட்டு அதனை ஏற்றுக்கொண்டால் அக்கட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆதரிக்கமாட்டோம் என்ற அளவில் பெரும் பிரச்சாரமொன்று மோற்கொள்ளப்படுகின்றது.
ஒரு சிங்கள பத்திரிக்கையின் ஒரு பக்க விளம்பரமாக கூட ஐந்து கட்சிகள் எட்டிய தீர்மானங்களுக்கு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
ஐந்து கட்சிகள் கோரிய கோரிக்கைகள் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக அகிம்சை மற்றும் ஆயுத ரீதியாக போராடிய எங்களுக்கு அமையாத கோரிக்கைகளாகவே நாங்கள் பார்கின்றோம். எங்கள் இலக்கு தெளிவாக இருக்கின்ற நேரத்தில் இக்கோரிக்கைகள் மிக சொற்பமாகவே காணக்கூடியதாக கிடக்கின்றது.
இதனையே எம்மக்களுக்கு வழங்க முடியாத சிங்கள பேரினவாத சக்திகள் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமிழர்களின் வாக்குகளை வேண்டி நிற்பது நகைப்புக்கிடமாகவே இருக்கிறது.
இதனடிப்படையிலே தமிழர்களின் வாக்கு தமிழனுக்கே கிடைக்கவேண்டும் என்பதற்காகவே சிவாஜிலிங்கம் அவர்கள் மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என அவர் தெரிவித்தார்.

