புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் தாயின் பின்னால் ஓடிய 3 வயது குழந்தை றிகேஸ்வரன் பஸ் மோதிப் பலி!! Photos

மட்டக்களப்பு ஆரையம்பதி ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்வண்டியில் ஏற முற்பட்ட தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பஸ்வண்டி மோதியதில் குழந்தை பரிதபகராமக உயிரிழந்ததையடுத்து சாரதியை கைது செய்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி முதலாம் பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய பிரகாஷ் றிகேஸ்வரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த வீதியைச்சேர்ந்த தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கம்பனி பஸ்வண்டியில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பஸ் வண்டியில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பஸ்வண்டி ரயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 1 person, child and smilingMay be an image of 4 people and childMay be an image of 2 people and text that says "Media Talent Talent Medid Meaia clenit Sates SHORLELAD D SHOKLE SHOKLELA LA A. e) NC NC-785G 7850 Media Talent Talent"May be an image of 10 people and people smiling