மருத்துவர்கள் உள்பட அரச ஊழியர்கள் அனைவரும் அரசியல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட
முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் தமது பிரத்தியேக முகநூல் ஊடாக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பரப்புரை
முன்னெடுப்பதும் வேட்பாளர் ஒருவரை விமர்சிப்பதும் தேர்தல் விதிமீறலாகும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் மதத் தலைவர்கள் தங்கள் மத நடவடிக்கைகளில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது அல்லது விமர்சிப்பது தேர்தல் மீறல்களாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.





