புதினங்களின் சங்கமம்

சரணடைந்த புலிகள் எல்லோரும் விடுவிக்கப்பட்டார்களாம்!! காணாமல் போனோர் என்று யாருமில்லை!! கோத்தா

“போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து
உறுப்பினர்களும் மறுவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சரணடைந்தவர்களைக்
காணவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை”

இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“2015 ஆம் ஆண்டு ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய இலங்கை தொடர்பான
தீர்மானத்தை எனது அரசு அங்கீகரிக்காது” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

“வெள்ளை வான் கலாசாரம் என்னுடையதில்லை. ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு
பதிலளிப்போம். இராணுவத்திற்கு நான் தலைமைதாங்கவில்லை” என்றும் கோத்தாபய ராஜபக்ச
குறிப்பிட்டார்.