புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண இசை நிகழ்வு போதைப்பொருள் விநியோகத்தர்களால் திட்டமிட்டு குழப்பப்பட்டதா? வீடியோ

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சி போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களால் திட்டமிட்டு குழப்பப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இசை நிகழ்ச்சியில் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான விஜபி கதிரைகளைப் பதிவு செய்து இருந்தவர்களில் 2 பேர் யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களைக் கடத்துபவர்களில் முக்கியமானவர்கள் என பதிவுகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இசை நிகழ்வில் கம்பிகளில் ஏறி சாகசம் செய்தவர்களும் அங்கிருந்த கதிரைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற அனைவரும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்றும் பலர் உறுதிப்படுத்தி சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள். போதைப்பொருள் கடத்தல் மன்னன் அருன்சித்தார்த்தின் அடியாட்களும் போதைப்பொருள் விநியோகத்தர்களான Capital ஊடகத்தின் பணிப்பாளரான் ராஜனின் மகனின் குழுவுமே இசை நிகழ்ச்சியை குழப்பியதாக சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவு செய்து வருகின்றார்கள்.

நிகழ்ச்சியை கதிரைகளில் அமர்ந்து கொண்டு பார்த்தவர்களுக்கும் நின்று பார்த்தவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி ஒன்று இருந்துள்ளது, இதனை மீறி யாரும் செல்லாதவாறு பொலிசார் மற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவினர் நின்ற போது நின்று கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையில் புகுந்த போதைப்பொருள் பாவிக்கும் காவாலிகளே குக்குரல் இட்டு கதிரைகளில் இருந்தவர்களை நோக்கிப் பாய்ந்ததாகவும் அதன் பின்னரே நின்றிருந்த இளைஞர்கள் உள்ளே நுழைந்ததாகவும் நேரில் காண்டவர்கள் தமது சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டுள்ளார்கள். நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மேடையில் நடக்கும் நிகழ்ச்சி தெளிவில்லாது இருந்துள்ளது. இந்த நிலையில் குறித்த போதைப்பொருள் காவாலிகள் மேடையை நோக்கி ஓடியபோதே ஏனையவர்களும் மேடைக்கு அருகில் நிகழ்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார்கள். அத்துடன் அப்பகுதியில் போடப்பட்டிருந்த சில மேடைகளில் ஏறி கதிரைகளை அடித்து உடைத்தவர்களும் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது.  அத்துடன் வேற்று மொழி பேசியபடி பலர் பார்வையாளர்களுடன் கலந்து நின்றதாகவும் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு இதற்கென காத்திருந்த Capital ஊடகத்தினர் இவற்றை காட்சிப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தமது சமூகவலைத்தங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.