தேசிய மட்ட பளுதூக்கல் வடமாகாணத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் எம்.மகிழினி தங்கப் பதக்கத்தையும், பாசையூர் புனித அந்தோணியார் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அ.விஜிதா வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டி பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற பெண்களிற்கான 40 கிலோ எடைப் பிரிவில் எம்.மகிழினி சினெச் முறையில் 38 கிலோ பளுவையும், கிளின் அன் ஜக் முறையில் 45 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 83 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், பாசையூர் புனித அந்தோணியார் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அ.விஜிதா சினெச் முறையில் 35 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 48 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 83 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.


