காதல் தோல்வி? கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உதயகுமார் துாக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
இரத்தினராஜா உதயகுமார் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை 1 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று முன்தினமே விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பியுள்ளார். நேற்று மதுபானம் அருந்திய பின்னர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இந்த துரதிஸ்டமான சம்பவம் நடந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.



