பெண்களின் மார்பகங்கள் அழகானவை…மார்பகங்களை பிடிக்காத ஆண்கள் இருக்கவே மாட்டார்கள்!!(Photos)

மார்பகங்கள் உண்மையிலேயே மிகவும் அழகானவை…மார்பகங்களை பிடிக்காத ஆண்கள் இருக்கவே மாட்டார்கள்..ஆணாக பிறந்த எவனுக்கும் பெண்களின் மார்பகங்கள் மீது ஒரு அளவுகடந்த ஸ்னேகிதமும் பிரியமும் இருக்கும்…..இல்லாவிட்டால் பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி..சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிபோனேன்,,,அஹா அவனே வள்ளளடி என வைரமுத்து பாடியிருப்பாரா?

அந்தக்காலத்தில் ஸ்டார் தொலைக்காட்சியில் bay watch எனும் நிகழ்ழ்சி ஒன்றை ஒளிபரப்புவார்கள்..அதில் நடித்த பமீலா அண்டர்சன் மார்பகங்கள் மீது எல்லா ஆண்களுக்கும் இன மத வர்க்க வேறுபாட்டை கடந்து ஒரு மையல் இருந்தது உண்மை தான்…அவர் வேறு breast augmentation surgery செய்து மிகவும் அழகாக இருப்பார்..
2011 இல் இந்தியா உலகக்கிண்னத்தை வெல்லக்காரணமான பூனம்பாண்டே அம்மையார் கூட இந்த ஆக்மெண்டேசன் சத்திரசிகிற்சை மேற்கொண்டுனிருந்தார்

தினமுரசு பத்திரிகையில் இடி அமீனின் சுயசரிதைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு column இல் பமீலாவின் செய்திகளை புகைப்படங்களுடன் அடிக்கடி பிரசுரித்து வாசகர்களை சூடாக வைத்திருப்பார்கள்.. ஆனாலும் என் நண்பன் ஈனாவுக்கோ ஃபேரிஸ் ஹில்டென் மீதே ஒரு ஈர்ப்பு இருந்தது…..அவனுக்கு பமீலாவை பிடிக்கது..

இந்த வைத்தியர்கள் தான் பாவம்..நான் முதலாம் ஆண்டு மருத்துவமானவனாக இருக்கும் போது முதல் நாள் டிசெக்‌ஷன் வகுப்பில் மார்பகம் ஒன்றை டிசெக்ட் செய்ய தந்துவிட்டார்கள்.ஒரு 50 வயது மதிக்கத்தக்க உடல்…டிசெக்ட் செய்யும் போழுது தான் உணர்ந்து கொண்டேன் அடக்கடவுளே இந்த மாபகங்கள் மீதா என் பதின்ம வயதில் ஆசையை வளர்த்துக்கொடேன் என என்னை நானே கடிந்து கொண்டேன்…ஒரு கொழுப்புத்திரட்டு..அதன் மீது ஒரு தோல் போத்தியதுபோல இருப்பது தான் மார்பகம்..நெற்றியில் ஒட்டிய பொட்டு போல நெஞ்சுப்பகுதியில் ஒட்டப்பட்ட பொட்டே மார்பகங்கள்..அன்று அந்த கொழுப்பை வழித்து வழித்து டிசெக்ட் செய்து களைத்தே விட்டேன்…அன்றுடன் வந்த வெறுப்புடன் எனது மார்பகங்கள் மீதான பிரியம் பிரிந்துவிட்டது

எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட இந்த அழகான மார்பகங்களின் கதையோ சோகமானது.

இந்தப்பதிவை என்னுடன் ஒன்றாக கற்று மார்பகப்புற்றுநோய் காரணமாக இறந்த என் நண்பிக்கும் எனக்கு விரிவுரையாளராக இருந்து இப்பொழுது மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்ட விரிவுரையாளருக்குமாக எழுதுகிறேன்…

சரி இந்த பெண்களை தாக்கும் மார்பகப்புற்றுநோய் என்றால் என்ன?

அதற்கு முதலில் புற்று நோய் என்றால் என்ன எனக்கூறிவிடுகின்றேன்

பொதுவாக எமது உடலில் கல வளர்ச்சி சீராக இருக்கவேண்டும்..திடீரென கலவளர்ச்சி சீராக இல்லாமல் அதிக அளவில் கட்டுப்பாடற்று பெருகும் நிலையை மருத்துவத்தில் நியோபிளேசியா-Neoplasia எனக்கூறுவோம்…மருத்துவத்தில் இரண்டுவகையான நியோபிளேசியா உண்டு..ஆபத்து இல்லாத benign கட்டிகள்.. கான்சரை ஏற்படுத்தும் malignant கட்டிகள்.. benign கட்டிகள் ஓவியா போல நல்ல கட்டிகள்..ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டுமே இருக்கும்..அயல் பகுதிகளுக்கு ஊடுருவிச்செல்வதோ ஏனைய இடங்களுக்கு பரவுவதோ இல்லை…

Image may contain: text

கலங்களும் அச்சொட்டாக அந்த கட்டி ஏற்பட்ட அங்கத்தின் கலங்களை ஒத்தது..மருத்துவத்தில் இதை well differentiated cells என குறிப்பிடுவோம்..இவற்றை வெட்டி அகற்றிவிட்டால் விடயம் சுமூகமாக முடிந்துவிடும்..மார்பகங்களில் வரும் ஃபைபிரோஅடினோமா கட்டிகள்-fibro adenoma இந்த ரகத்தை சார்ந்தவை..வெட்டிஅகற்றவே தேவையில்லை…விரும்பினால் வெட்டிஅகற்றலாம்…fibro adenoma கட்டிகள் தொடர்பாக நீங்கள் பயம்கொள்ளத்தேவையில்லை

மாறாக malignant கட்டிகளோ அருகில் இருக்கும் அங்கங்களை ஊடுருவி அவற்றை நாசம் பண்ணி உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி அந்த அங்கங்களையும் நாசமாக்கிவிடும்..கலங்களை எடுத்துக்கொண்டால் அவை மிகவும் abnormal ஆக இருக்கும்..மருத்துவத்தில் இவற்ரை poorly differentialed cells எனக்கூறுவோம்..மார்பக புற்று நோயைஎடுத்துக்கொண்டால் அது அருகில் இருக்கும் அடுத்த மார்பகத்திற்கு பரவி சுவாசப்பைக்கு பரவி முள்ளந்தண்டிற்கு பரவி மூளை வரை பரவி நாசகாரியங்களை நிகழ்த்திவிடும்.

இதனால் நோய் ஏற்பட்டால் அந்த பகுதியை வெட்டி அகற்றி அந்த பகுதியில் வெட்டி அகற்றப்படாமல் தப்பித்த கலங்களை அழிக்க radiotheraphyயும் அந்த கான்சர் உடலில் ஏனைய பகுதிக்கும் பரவியிருக்கும் என்பதால் அவர்றை அழிக்க chemotheraphyயும் வழங்குகின்றோம்..

Image may contain: one or more people, people standing and phone

சரி யார் யாருக்கெல்லாம் மார்பகப்புற்றுநோய் ஏற்படும்..ஏன் ஏற்படும்..அன்மையில் கூட இலங்கையை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் கவிஞர் மார்பகப்புற்றுநோயால் இறந்துவிட்டார்..அவரது கணவன் அவரை மிகவும் துன்புறுத்தி மர்பகங்களில் அடித்தமையால் கான்சர் ஏற்பட்டதாக முகநூலில் வாசித்தேன்..அது தவறு..மார்பகத்தில் trauma ஏற்படுவதால் கான்சர் ஏற்படாது…அதுபோல இறுக்கமாக Bra/padded Braபோடுவதாலும் கான்சர் ஏற்படாது

உங்களுக்கு தெரிந்திருக்கும் தேயிலைத்தோட்டங்களில் தேயிலை பயிர்கள் நன்றாக வளர பயிர்களுக்கு உரம்பாச்சி வளர்ப்பார்கள்,,,பயிர்களும் நன்றாக வளரும்..ஆனாலும் சில பயிர்கள் நாம் எதிர்பார்க்கும் தரமான தேயிலை பயிர்களாக வளராது..உடனடியாக அங்கே உள்ள வேலையாட்கள் அவற்றை வெட்டி அப்புறப்படுத்திவிடுவார்கள்..

Image may contain: one or more people

அதுபோலதான் மார்பககங்களிலும்..இங்கே உரமாக ஈஸ்ரொஜன் எனும் ஹார்மோன் வழங்கப்படும் போது(பருவமடைந்த பின்னர்) மார்பக கலங்கள் பெருகி மார்பகம் அழகாக வருவதுடன் அளவில் பெரிதாகும்..ஆனாலும் சில கலங்கள் ஒழுங்கான கலங்களாக வளராமல் கான்சரை ஏற்படுத்தும் கலங்களாக வளர ஆரம்பிக்கும்,,,ஆனாலும் எமது உடலில் உள்ள BRACA1,BRACA2,P53 என அழைக்கப்படும் ஜீன்கள் இப்படிப்பட்ட அசாதாரன கலங்களை தோன்றுகிறதா என நோட்டம் விட்டபடி இருக்கும்..

No photo description available.

இவற்றை கண்டவுடன் ஓடிச்சென்று அவற்றை அழித்து விடும்..இந்த ஜீனில் கோளாறு ஏற்பட்டால் அந்த கேன்சர் கலங்கள் தப்பிபிழைத்து புற்றுநோய் ஏற்படுகிறது..ஆக இப்பொழுது விளங்கி இருக்கும் மார்பக புற்றுநோய்களுக்கான காரணிகளில் முக்கியமானவை இந்த ஜீன்களில் வரும் கோளாறும் எமது உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ரொஜனும் தான்..Having a higher lifetime exposure to estrogen may increase breast cancer risk

Image may contain: text

ஒரு விடயம் தெரியுமா?
நடிகை ஏஞ்ஜெலினா ஜூலி மார்பகபுற்றுநோய் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமானவாராக இருந்த போதும் அவரது BRACA ஜீன்களில் கோளாறு என அறியப்பட்டதும் இனிமேல் தனக்கு மார்பகப்புற்றுநோய் வரும் என அஞ்சி மார்பகப்புற்றுநோய் ஏற்படாமலேயே தனது இரண்டு மார்பகங்களையும் வெட்டி எடுத்துவிட்டார்

பெண்கள் உடலில் எப்பொழுதும் ஈஸ்ற்றொஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும்,,இது குறைவாக இருக்கும்காலப்பகுதியெனில் பெண்கள் பருவமடைய முன்னும் பெண்களுக்கு மெனபோஸ் எனப்படும் மாதவிடாய் முடிவு ஏற்படும் போதும்…

பருவமடைந்ததில் இருந்து மெனபோஸ்வரும் வரை ஈஸ்ரொஜன் அதிகமாகவே இருக்கும்…இந்தக்காலப்பகுதியில் பெண்கள் கருத்தரிக்கும் பொழுதும் பிள்ளைகளுக்கு பாலூட்டும் பொழுதும் தற்காலிகமாக ஈஸ்ரொஜன் செறிவு உடலில் குறைவாக இருக்கும்…உதாரணமாக உங்களுக்கு 5 பிள்ளைகள்..அவர்களுக்கு நீங்கள் ஒரு வருடம் பாலூட்டினால் கிட்டத்தட்ட உங்கள் வாழ்நாளில் ஒரு 10 வருடம் குறைந்த ஈஸ்ரொஜன் செறிவுடன் வாழ்வீர்கள்(மார்பகப்புற்றுநோய் வரும் அபாயம் 10 வருடங்களால் குறைகிறது)#

No photo description available.

மாறாக நீங்கள் 8/9 வயதில் பருவமடைந்து ஒரு 60 வயதில் மெனபோஸ் ஏற்பட்டு அல்லது ஆண்களை வெறுக்கும் பெண்ணியவாதியாக இருந்தால்
(இவர்கள் திருமணம் செய்து குழந்தை பெறமாட்டார்கள் அல்லவா )
இதனால் உங்கள் வாழ்நாளில் உங்கள் உடலில் ஈஸ்ரொஜன் எக்ஸ்பாஷர் அதிககாலம் இருக்கும்…மார்பகப்புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கும்..எனவே நீங்கள் இந்த கேட்டக்கரி என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..

மாதாந்த மார்பக சுயபரிசோதை(self breast examination) செய்து வருடாந்த மமோகிராம் பரிசோதனை செய்யவேண்டும்…இந்த சுயமார்பகப்பரிசோதனையை மாதவிடாய் முடிந்த 5 நாட்களின் பின்னர் செய்யுங்கள்..
self breast examination எப்படி செய்வது என youtube வீடியோக்களை பாருங்கள்
(50 வயதிற்கு மேல் என்றால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மமோகிராம் பரிசோதனை செய்யவேண்டும்)
40 வயதுக்குள்ளே எனில் மாதாந்த சுயமார்பகப்பரிசோதனை போதுமானது..மமோகிராம் தேவையில்ல..

அது போல ஆன்ரொஜென்ஸ் எனப்படும் ஹார்மோன்கள் எமது உடலில் உள்ள கொழுப்புக்கலங்களினால் ஈஸ்ரொஜனாக மாற்றப்படுகிறது,,,எனவே மிகவும் உடல் பருமனான பெண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் அபாயம் இருக்கிறது..இதனால் உடற்பருமனான பெண்கள் இப்பொழுதே உடல் பருமனை குறைக்கும் நடவடிக்கைகளை முடக்கி விடுங்கள்

சரி உங்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதா என எப்படிக்கண்டறியலாம்?

முதலில் உங்கள் பெற்றோரை கேளுங்கள் உங்கள் குடும்ப இரத்த உறவினர்கள் யாருக்காவது மார்பக புற்றுநோய் அல்லது சதையி புற்றுநோய்(pancreatic cancer)அல்லது சூலகபுற்றுநோய்(ovarian cancer) ஏற்பட்டதா என..பதில் ஆம் எனில் உங்களுக்கும் அபாயம் உள்ளது…

நீங்கள் மெனபோசை கடந்து ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் சிகிற்சை பெற்றுகிறீர்களா?உங்களுக்கும் ஆபத்து உண்டு
(அப்படியானால் மித்திரி கர்ப்பத்தடை குளிசை பாவித்தால் கான்சர் வரும் அபாயம் உண்டா எனக்கேட்காதீர்கள்..எனக்கும் பதில் தெரியாது..இல்லை என்பதாக நினைக்கிறேன்)

நீங்கள் 8/9 வயதில் பருவமடந்தவரா(<12 வருடங்கள்)?
உங்கள் மெனபோஸ் 55 வயதின் பின் ஏற்பட்டதா?
உங்களுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லையா?
நீங்கள் ஆல்கஹால்/புகைக்கும் பழக்கமுடையவரா?
அதிக கொழுப்பு உணவுகளை உண்பவரா?

உங்களுக்கான மார்பகப்புற்றுநோய் அபாயம் ஏனையவர்களை விட அதிகமானது
உங்கள் மார்பகங்களை மாதம் ஒருமுறை கண்ணாடியின் முன்னர் நின்று பரிசோதியுங்கள்…முலைக்காம்புகளில் ஏதும் திரவம் வடிகிரதா?
முலைக்காம்புகள் உள்நோக்கி திரும்பியிருக்கிறதா(indrawing nipple)
ஏதும் கடினமான கட்டி உள்ளதா?
கட்டியை தொடும் பொழுது வலி ஏற்படவில்லையா?
அந்த கட்டியின்மேல் உள்ள தோல் உள்நோக்கி இருக்கிறதா?
அழகிய மார்பகங்களின் தோல் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை ஒத்தது போல மாறியிருக்கிரதா?
இத மருத்துவத்தில் போடறாஞ்ச்-peau d’orange எனக்கூறுவோம்..இது ஒரு பிரெஞ்சு வார்த்தை..மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டில் படிக்கும் போது இதை நாம் பியூடீஒரேஞ் என கூறி பல்பு வாங்கி இருக்கிறோம்..

சரி இப்படியான குணங்குறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்..அவர்கள் 3 படிநிலைகளாக உங்களை பரிசோதிப்பார்கள்…இதை tripple assesment எனக்கூறுவோம்

முதலிம் உங்கள் மார்பகங்கள் கமக்கட்டு என்பவற்றை சோதிப்பார்கள்..ஏதும் தொட்டு உணரக்கூடிய கட்டிகள் உள்ளனவா என…

பின்னர் மமோகிராம்/ultrasound ஸ்கேன்/MRI scan செய்வார்கல்…மமோகிராம் எனபது எக்ஸ்ரே எடுப்பது போன்றது..கல்சியப்படிவுகள் மமோகிராமில் தென்பட்டால் அது அசாதாரண மார்பகம்…

அல்ராசவுண்ட் ஸ்கேனில் கட்டிகள் தென்படும்..அவை BIRADS 4 க்கு மேற்பட்ட stage எனில் அனேகமாக கான்சர் ஆக இருக்கும்…MRI scan மூலம் கான்சர் எவ்வளவு பரவியுள்ளது..எந்த எந்த அங்கங்களுக்கு சென்றுள்ளது என அறியலாம்..

மூன்றாவதாக ஒரு ஊசிமூலம் அந்த கட்டியின் கலங்களை பெற்று நுணுக்குகாட்டி மூலம் சோதித்து கேன்சரை கன்ஃபார்ம் செய்வார்கள்..

அப்படி அந்த கலங்களில் ஈஸ்ரொயன் ரிசெப்டர்கள் இருந்தால் நல்லது,,ஆனால் HER2 எனும் ரிசெப்டர் இருப்பது கெடுதியானது…HER2 receptor positive நோயாளிகளின் prognosis நன்றாக இருக்காது..

ஆகவே ஈஸ்ரொஜென் ரிசெப்டர் இருப்பதால்உங்கள் கான்சருக்கான கறுப்பு ஆடு ஈஸ்ரொஜன் எனக்கண்டுபிடித்துவிட்டோம்,,எனவே மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு ஈஸ்ரொஜெனை குறைப்பதற்காக ஈஸ்ரொஜெனை சுரக்கவைக்கும் கபச்சுரப்பியை கட்டுப்படுத்த goserelin எனும் மருந்தோ அல்லது சூலகத்தை வெட்டிஎடுப்பதோ அல்லது மார்பகங்களில் உள்ள ஈஸ்ரொஜென் ரிசெப்டரை தடை செய்யும் tamoxifen மருந்தோ வழங்கப்படலாம்.

மெனபோஸ் ஆன பெண்களுக்கு சூலகம் ஈஸ்ரொஜனை விடுவிக்காது..நான் கூறியது போல கொழுப்புகலங்கள் ஆன்ரஜன்களை ஈஸ்ரஜனாக மாற்றும் செயன் முறையை நிரோதிக்கும் anastrozole எனும் மருந்து வழங்கப்படும்

Image may contain: text

வைத்தியர்கள் உங்கள் மருத்துவப்பரிசோதன மற்றும் ரிப்போர்ட் அடிப்படையில் TNM எனப்படும் staging செய்தபின்னர் தனியே மார்பக புற்றுநோய் கட்டியை அகற்றுவதா அல்லது மார்பகத்தில் ஒரு பகுதியை அகற்றுவதா அல்லது முழு மார்பகத்தையும் அகற்றுவதா/முழுமார்பகமும் அதனுடன் இருக்கும் தசைகள் கமக்கட்டு பகுதியில் இருக்கும் நிணநீர் கணுக்களை அகற்ருவதா என முடிவு எடுப்பர்கள்..அகற்றியபின் ரேடியோ தெரப்பியும் கீமோ தெரப்பியும்ற்படும்வழங்கப்படும்…எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக மார்பகப்புற்றுநோயை கண்டுபிடிப்பது விரைவாக சிகிற்சை தருவதும் உங்கள் ஆயுற்காலத்தை அதிகரிக்கும்

மார்பகப்புற்றுநோயை குணமாக்க ஆயுர்வேத மருந்துகளோ/மாட்டு மூத்திரமோ/கிருஸ்தவர்களின் ஜெபமோ ஒரு வழியல்ல…நவீன மருத்துவம் மட்டுமே இதற்கான தீர்வை தரும்…தாமதமான சிகிற்சை விரைவாக இறக்க வழிசெய்யும்…

இன்னொரு விடயம்..இந்த மார்பகப்புற்றுநோய் ஆண்களுக்கும் ஏற்படும் சாத்தியம் உள்ளது

எனவே மார்பகப்புற்றுநோய் தொடர்பாக விழிப்பாக இருங்கள்,,,உங்களை காத்துக்கொள்ளுங்கள்

நன்றி. முகப்பக்கம்
அன்புடன் Dr.Grey

error

Enjoy this blog? Please spread the word :)