காதல் தோல்வி!! மட்டு’வில் விதுசினி தற்கொலை செய்தது ஏன்?? (Photos)

·
கடந்த நான்கு வருடமாக #ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை சேர்ந்த 22 வயதுடைய தவராசா விதுசாஜினி என்ற யுவதியே தூக்கிட்டு மரணித்தவராவார்.
இவரது பெற்றோருக்கு மூன்று ஆண் மக்களுடன் இவர் மட்டுமே பெண் பிள்ளையாகும்.
இவர் காதல் வயப்பட்டிருப்பது கடந்த ஆறு மாதங்களாகத்தான் பெற்றோர் அறிந்திருக்கின்றனர்.
ஆனாலும் பெற்றோர் எதிர்ப்புக் காட்டவில்லை.
கல்வியறிவு குறைந்த பெற்றோர், காதலன் யார்? எந்த ஊர்? என்று கூட மகளிடம் கேட்டுக்கொள்ளவில்லையென்பது விசாரணைகளில் தெரியவந்தது.
நேற்று 01-05-2021 மேதின லீவு என்ற படியால், வேலைக்கு செல்லாமலிருந்த இந்த யுவதி பகலுணவு உட்கொண்டபின் அவரது படுக்கையறைக்குள் சென்று உறங்கியிருக்கிறார்.
மாலை நேரம் தேனீர் குடிப்பதற்காக இவரது தாய் எழுப்பியபோது, படுக்கையறைக் கதவு பூட்டப்பட்டு இவரது சத்தம் எதுவுமே வெளிவராத நிலையில், கத்தியைக் கொண்டு கதவை தெண்டி திறந்தபோதுதான்,
வீட்டுவளையில் சாறியொன்றினால் மகள் தூக்கிட்டு தொங்கி மரணித்திருப்பதை அடையாளம் கண்டுள்ளார்.
காதல் விவகாரம்தான் தற்கொலையில் முடிவுற்றிருக்கிறது என்பது யுவதியின் கைத்தொலைபேசி மூலம் அறியக்கிடைத்தது.
காதலன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அறிய முடிகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

May be an image of 1 person and standing May be an image of indoorNo photo description available.May be an image of one or more people and people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)