காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிஅலைந்த தாய் மரணம்!!
இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் நேற்று 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு விசுவமடுவை சேர்ந்த மைக்கேல் இயேசு மேரி வயது 74 என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இவருடைய மகன் 2009 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் மகனைத் தேடி அலைந்து முகாம்களுக்கும் சென்று அவரால் இறுதிவரை மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை தொடர் போராட்டத்தில் இந்த தாய் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

