மைத்திரியால் குழப்பமடைந்துள்ள மகிந்த …!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை கொள்வதா அல்லது அவரை ஜனாதிபதியாக களமிறக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மீது நமிக்கை கொள்வதாக என்ற குழப்பத்தில் மகிந்த ராஜபக்ஷவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Mahinda Rajapaksa is confused by Maithripala Sirisena
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுந்திர கட்சியின் அமைச்சரும் அங்கத்துவருமான மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க களமிறக்கினார்.
பின்னர் ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்ட நொவெம்பர் அரசியல் புரட்சியின் காரணமாக பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் மகிந்த பிரதமர் என தீர்மானித்து ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பகைத்து கொண்டார் மைத்திரிபால சிறிசேன.
இதனை தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷ தனது சகோதரனான கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதி வேட்பாளராகவும், தன்னை அக்கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஓரிரு தினங்கள் நீடிக்க ரணிலின் தரப்பு கோட்டாவின் குடியுரிமை தொடர்பிpல் கேள்வி எழுப்பி தேர்தல் களத்திற்கு பெரும் ஆபத்தான நிலையை தோற்றுவித்தது.
நீதிமன்றம் அதற்கு சார்பான ஒரு தீர்வினை நடுநிலையாக எடுத்துரைத்ததன் பின்னர் சட்டத்தரணிகள் உள்ள்ளிட்ட சிலர் நீதிமன்றில் கரகோசம் எழுப்பி சட்ட சிக்கலில் உள்வாங்கியிருக்கின்றர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால், கோட்டாவிற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டால் அவரின் நிலைமை வேட்பாளர் நிலையிலிருந்து அகற்றிவிடும் என்ற காரணத்திற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவை வேட்பாளராக களமிறக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
கட்சியில் பலர் சிரேஷ்ட்டர்களாக காணப்பட்ட போதிலும் சமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டமை அனைத்து உறுப்பினர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச மைத்ரியை நாடி கலந்துரையாடிய போது மைத்திரி பொது சின்னத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கட்டுபணம் செலுத்திய சின்னத்தினை மாற்ற முடியாது என்பதற்காக சிக்கல் நிலையையும் எதிரிநோக்குகிறது மகிந்த தரப்பு.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவை மகிந்த புறக்கணிப்பாரா அல்லது அவரின் தரப்பை ஏற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
நாளைய தினம் காலை 6 மணி முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாட்டின் நலனில் சுயநலம் தேடும் அரசியல் வாதிகளின் இறுதி தீர்மானம் வெளியாகும் என சமூக நல அரசில் விமர்சகர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு விரக்தியுடன் தெரிவித்தார்.

