ஜனாதிபதித் தேர்தல் 2019 – 35 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல்!
35 வேட்பாளர்கள் 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி; நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
இன்று 11மணியுடன் நியமனப்பத்திரம் தாக்கல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இவ்வாறு தாக்கல் செய்தவர்களில் ஸ்ரீ-லங்கா பொதுஜன பெருமுன கட்சியைச் சேர்ந்த கோட்டபாய ராஜபக் ஷவும், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுர குமார திஸ்ஸநாயக்கவும் அடங்குவர்.
மேலும் சிறிதுங்க ஜெய சூரிய, பிய சிறி விஜயநாயக்க, வஜிர பாலி விஜய ஜெயவர்த்தன. ஆரியபன்ச டிஸ்ஸநாயக்க, ரஜீவ் விஜயதுங்க மற்றும் மகெஸ் சேனநாயக்க ஆகியோர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தவர்களில் சிலராகும்.
மேலும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் மூவர் மாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை உன அறிவித்துள்ளதாக தேர்தவ் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார் ஆயினும் அப் பெயர் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் ஆட்சேபனைகள் 11.30க்கு நிறைவுபெற்றதை அடுத்து 35 நியமனப்பத்திரங்களும் தேர்தல் ஆணையகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோதும் அந்த ஆட்சேபனையை தேர்தல் ஆணையகம் நிராகரித்து விட்டது.

