21 வயது யுவதியை வீதியில் வைத்து கொடூரமாக வெட்டியவர் தொலைபேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்!!
பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் 21 வயது யுவதியை கத்தியால் கொடூரமாக தாக்கி படுகாயப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யுவதியை தாக்க பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த யுவதி நேற்று (27) மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, மறைந்திருந்த சந்தேக நபர் கத்தியை எடுத்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கும் தாக்கப்பட்ட யுவதியின் உறவினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் தொலைபேசி சிக்னல் டவரில் காவலாளியாக பணிபுரிகிறார்.
யுவதியைத் தாக்கிய பின்னர், சந்தேக நபர் சமிக்ஞை கோபுரத்தின் மீது ஏறியுள்ளார். பொலிசார் பெரும் முயற்சியெடுத்து அவரை கீழே கொண்டு வந்து காவலில் எடுத்துள்ளனர்.
அதன் போது ஆத்தரமடைந்த கிராம மக்கள் சந்தேக நபரை தாக்க முற்பட்ட போதிலும் பொலிஸார் அவரை பாதுகாத்தனர்.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.