புதினங்களின் சங்கமம்

கோர விபத்து ; அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் பலி!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x