புதினங்களின் சங்கமம்

யாழில் பச்சைக்கள்ளனான அரச அதிபருடன் சேர்ந்து ரஜீவன் எம்.பியும் ஊழலா? மீனவர்களிடம் பிச்சை வாங்க வேண்டுமா?

சமூகவலைத்தளத்தில வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

அண்மையில் வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி நிகழ்விற்காக வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம் பணம் வாங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டைக்காட்டில் இருந்து குடாரப்பு வரையான கரைவலை மற்றும் அட்டை வாடிகளிடம் பத்து இலட்சத்திற்கும் அதிகமான பணம் சேர்க்கப்பட்டுள்ளது .
பணம் வாங்கியதற்கான பற்றுச் சீட்டு இதுவரை பணம் கொடுத்தவர்கள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதனை பணம் கொடுத்த பலரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இதனை தெரியப்படுத்துகின்றேன்
எவ்வளவு பணம் பெறப்பட்டது? எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது? போன்ற மேலதிக கணக்காய்வு தகவல்களை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
ஒரு மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண நிகழ்வை நடாத்துவதற்கு யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் வக்கற்று அப்பாவி மீனவர்களிடம் தெண்டி பற்றுச் சீட்டுக் கூட குடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்
பற்றுச் சீட்டை வழங்காது மீனவ வாடிகளிடம் பணம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
ஒரு அரச நிகழ்வை அப்பாவி மீனவர்களின் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் நடத்தி சாதனை நிலை நாட்டிய வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உட்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் வடமராட்சி கிழக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
Rajeeivan Jeyachandramoorthy பாவம் கெளரவ ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு கூட இது தெரியாமல் இருக்கும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x