ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!
வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாநகர சபையில் நடைபெற்ற சில செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , முதல்வரான சு.காண்டீபனையும் , உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றரிக்ககையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும் , உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை வறிதாக்கியும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார்.


