புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது! எதற்காக?

அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமிழரான York பிராந்திய காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. கிவியன் கேதீஸ்வரன், கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்ததாகவும் கூறப்படும்

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, ஒரு அரசு அதிகாரியின் நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (17) இவர் கைது செய்யப்பட்டார்.

அவர் எதிர்வரும் September மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

York பிராந்திய காவல்துறையின் தொழில்முறை தரநிலைகள் பணியகம் நடத்தி வரும் விசாரணையின் விளைவாக, கிவியன் கேதீஸ்வரன் April 11, 2025 முதல் ஊதியத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் October 2024 முதல் York பிராந்திய காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

Vaughan நகரம், King Township தெற்குப் பகுதியில் வசிக்கும் சுமார் 330,000 குடியிருப்பாளர்களுக்கு சேவை வழங்கும் York பிராந்திய காவல்துறையின் 4-வது பிரிவில், அவர் சீருடை அணிந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Ontario Sunshine பட்டியலின்படி, கிவியன் கேதீஸ்வரன் 2025-ஆம் ஆண்டில் சலுகைகளுக்கு முன்னர் $112,069 ஊதியம் பெற்றார்.

காவல்துறை ஊழல் தொடர்பான மற்றொரு விசாரணையான ‘Project South’ உடன் இந்த விசாரணைக்கு தொடர்பில்லை என York பிராந்திய காவல்துறை கூறுகிறது.

இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x