யாழ் ஊர்காவற்துறை விஜிதாவின் ஆடைகள் அகற்றப்பட்டு பலரால் குதறப்பட்டாள்!! அவளது மர்ம பகுதிக்குள் மிளகாய் துாள் பூசப்பட்ட வாழைப் பொத்தி சொருகப்பட்டது!!
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தற்போதும் நடைப் பிணமாக உயிர் வாழ்ந்து வரும் 52 வயதான அழகான தமிழ் பெண் தனக்கு நடாத்தப்பட்ட கொடூர சித்திரவதையிலிருந்து இன்னம் முற்றாக விடுபடாத நிலையில் தனது வயோதிபத் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் ஒரு பகுதியை நாம் இங்கு தந்துள்ளோம். முழுமையான விபரங்கள் இன்னம் சில நாட்களில் வெளியிடுவோம்.
இலங்கையின் உயர்நீதிமன்றம் பல விசித்திரமான, விபரீதமான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை சந்தித்து இருக்கின்றது.
25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொடூர சம்பவத்தின் பதிவு இது
அவற்றுள் பலவற்றுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டியும் இருக்கின்றது.
அந்த வகையில், மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தில் அடிப்படை உரிமை மீறல்களுக்கு ஆளான தமிழர்களின் உச்ச நம்பிக்கையாக உயர் நீதிமன்றமே அமைந்தது.
உயர் நீதிமன்றம் சந்தித்த விசித்திரமான விபரீதமான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் ஒன்று யோகலிங்கம் விஜிதா வழக்கு ((SC FR 186/2001).
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்கிற சந்தேகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறையை சேர்ந்த விஜிதா – வயது 27 என்பவர் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
இவர் தாக்கல் அடிப்படை உரிமை மீறல் மனுவில் பொலிஸார் அவரை முழு நிர்வாணமாக்கி அடித்ததாகவும், இரவிரவாக பல நாட்கள் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸ் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்களால் பல தடவைகள் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் நிற்க வைத்து குதப்பகுதிக்குள் கம்பியைச் சொருகிய பின் வெளிப்புறத்தில் அந்த கம்பியின் மேல் அடித்ததாகவும் , மார்பகங்களை காலணியால் மிதித்ததாகவும், நகங்கள், பெண் உறுப்பு பகுதிகள், மாா்பக முனைகள் போன்றவற்றில் ஊசிகள் செலுத்தியதாகவும், சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிட வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கையெழுத்திட மறுத்தபோது அவரின் அந்தரங்க உறுப்புக்குள் மிளகாய்த் தூள் தடவப்பட்ட வாழைப்பொத்தியை வலுக்கட்டாயமாக உட்செலுத்தியதுடன் பின்னார் அந்த பகுதியை தண்ணீரால் கழுவ விடாமல் தடை போட்டு கடுமையான வேதனையை அனுபவிக்க செய்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் அவர் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையில்:-
உறுப்பில் ஊடுருவல் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரங்கள் உள்ளன.
இடுப்புப் பகுதியில் தொற்று மற்றும் தொடர்புடைய காயங்கள் உள்ளன
உடலின் பல பகுதிகளில் காயங்களும் தழும்புகளும் உள்ளன.
மன அழுத்தத்துக்குப் பிந்தைய உளவியல் பாதிப்பு (PTSD) அறிகுறிகள் உள்ளன
என்று சொல்லப்பட்டிருந்தது.
மருத்துவ அதிகாரிகள், வாழைப்பொத்தி போன்ற பொருள் உட்புகுத்தப்பட்டால் அத்தகைய காயங்கள் ஏற்பட முடியும் என்றும், மனுதாரர் தெரிவித்த சம்பவங்களுடன் மருத்துவ முடிவுகள் பொருந்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.
மனுவில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், விளக்கமறியல் சாலை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான Mark Fernando, H. S. Yapa Gunasekera, Ameer Ismail ஆகியோரை கொண்ட நீதியரசர்கள் குழு இம்மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. நீதியரசரகள் குழு தலைவர் H.S. Yapa Gunasekera தீர்ப்பை எழுதினார்.
2002 ஓகஸ்ட் 28 ஆம் திக தி வழங்கப்பட்ட தீர்ப்பில், உயர் நீதிமன்றம் மனுதாரரான யோகலிங்கம் விஜிதாவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் 11 ஆம் உறுப்புரையில் உறுதி செய்யப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளில் இருந்து பாதுகாப்பு பெறுகிற அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்தது.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் வழக்கின் சூழ்நிலைகளை ஆராய்ந்த பின்னர், மனுதாரர் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டதை கண்டறிந்ததாக அறிவித்தது.
மனுதாரரான யோகலிங்கம் விஜிதாவுக்கு ரூபாய் 250,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் ரூபாய் 150,000 அரசால் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சித்திரவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதை சட்ட மா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மனுதாரரை ஆதரித்து சட்டத்தரணிகளான வி. எஸ். கணேசலிங்கம், வி. யோகேஸ்வரன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இவ்வழக்கு, இலங்கையில் மனித உரிமைகள், பொலிஸ் பொறுப்புக் கூறல் மற்றும் சித்திரவதை எதிர்ப்பு சட்டங்களின் அமுலாக்கம் தொடர்பாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முக்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

