புதினங்களின் சங்கமம்

முல்லைக்கு பதிலாக வருகிறார் பாரதி கண்ணம்மா-முதல் நாள் படப்பிடிப்பிலே அனைவரும் பாராட்டு!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நாடகங்களில் ஒன்றாக காணப்படுவது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் இடம்பெற்ற கதிர் மற்றும் முல்லையின் ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் இதில் நடித்துக்கொண்டிருந்த நடிகை சித்ரா சென்ற வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணம் சின்னத்திரையை மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனினும் இவரது முல்லை கதாபாத்திரத்திற்கு பதிலாக யாரும் நடிக்க கவலையில் முன்வரவில்லை.
சித்ரா மேல் பிரியம் கொண்ட மக்களும், வேறு யார் வந்தாலும் நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த, முல்லை கதாபாத்திரத்தில், இனி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அறிவுமணி (காவியா) நடித்து வருகிறாராம்.

ஆம் முதல் நாள் படப்பிடிப்பில் கூட முல்லை போல் நடித்து படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளாராம் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் மிகவும் அமைதியான பெண் போல் தான் நடித்திருப்பார் என்பதால், இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்படுகிறது.

எனினும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் சித்ராவின் முல்லைக் கதாபாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.