இரவில் பஸ் இன்றி வாடினர் பயணிகள்.உதவிக்கு மறுத்த இராணுவத்தினர்
பரந்தன் புதுக்குடியிருப்பு போக்குவரத்து வெள்ளம் காரணமாக பாலம் உடைந்த நிலையில் தடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(06) இரவு பரந்தன் பஸ் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பேருந்து சேவை இன்றி பயணிகள் தவித்தனர்.
மேலும் இராணுவத்தினரின் உதவியை கோரிய போதும் அவர்களினால் மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் சிலர் முச்சக்கர வண்டியில் செல்ல, ஆண்களிற்கு வீதியால் சென்ற டிப்பர் ரக வாகன உரிமையாளர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் பஸ் சேவையை குறுந்தூர சேவையாக ஆற்றி இருக்கலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.



