புதினங்களின் சங்கமம்

நீராவியடியில் இந்து ஆலயம் எப்போது இருந்தது..? எஸ்.பி. இன் புதிய கண்டுபிடிப்பு

பத்தரமுல்லையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆரம்பத்திலிருந்து நாயாறு பகுதியில் குருகஹந்த விகாரை மாத்திரமே காணப்பட்டதாக கூறிர எஸ்.பி அந்த விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை வைத்து பூசித்ததாகவும் கூறியுள்ளார்.

அதேபோன்று குறித்த பகுதி பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டமைக்கான வரலாற்று ரீதியாகவும், தொல்பொருள் திணைக்களத்தினதும் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வரலாற்றையும், உண்மையையும் சரியாக ஆராயாமல் பௌத்த மற்றும் இந்து மதத்தை மையப்படுத்தி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.